தனியார் பள்ளிகளுக்கு புதிய கல்விக் கட்டணம் மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 27, 2019

தனியார் பள்ளிகளுக்கு புதிய கல்விக் கட்டணம் மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் அறிவிப்பு


தனியார் பள்ளிகளுக்கு நிர்ண யிக்கப்பட்டுள்ள புதிய கல்விக் கட்டண விவரங்களை மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் வெளி யிட்டுள்ளது.

இதுகுறித்து மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகா ரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை:

தனியார் பள்ளிகளில் கல்விக் கட்டண நிர்ணயக் குழுவால் நிர்ண யிக்கப்பட்ட கட்டண விவரங்களை இணையதளத்தில் வெளியிடக் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதற் கிடையே கல்விக் கட்டணநிர்ணயக் குழு அங்கீகரித்து கட்டணம் நிர்ண யம் செய்துள்ள தனியார் பள்ளி களின் பட்டியல் மற்றும் கட்டணவிவரம் www.tamilnadufee committee.com இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் அந்த பள்ளிகளின் பட்டியலை எடுத்துக் கொள்ள வேண்டும்.அதன்பின் தங்கள் மாவட்டத் திலுள்ள அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகள் பட்டியலுடன் ஒப்பிட்டு ஆய்வு செய்து, அங்கீகாரம் பெற்றபின்னரும் இதுவரை கட்டண நிர்ணயம் செய்யப்படாத பள்ளிகளின் பட்டியலைத் தயார் செய்ய வேண்டும். அந்தப் பள்ளிகள் ஒரு மாதத்துக்குள் கல்விக் கட்டண நிர்ணயக் குழுவிடம் விண்ணப்பித்து, தங்கள் கட்டணத்தை நிர்ணயம் செய்து கொள்ள சுற்றறிக்கை அனுப்ப வேண்டும்.

இதுதவிர இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள புதிய கட்டண விவரத்தின்படி தங்கள் மாவட்டத்தில் உள்ள மெட்ரிக் பள்ளிகளில் ஆய்வு செய்து அரசு நிர்ணயித்த கட்டணம்தான் வசூலிக்கப்படுகிறதா என்பதை உறுதி செய்து, ஜூலை 1-க்குள் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் அறிக்கை அனுப்ப வேண்டும்.

1 comment:

  1. Enna than sonnalum private school corres fix pannum amount makkal kattranga

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி