சிறப்பாசிரியர் பணி நியமனம் வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் - kalviseithi

Jun 18, 2019

சிறப்பாசிரியர் பணி நியமனம் வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்


பள்ளிக் கல்வித் துறை வளாகத்தில் உள்ள ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகம் முன்பு தையல்,ஓவியம், இசை ஆகிய பிரிவுகளில் தேர்ச்சி பெற்று இன்னும் பணி நியமனம் வழங்கப்படாததைக் கண்டித்து பாதிக்கப்பட்டவர்கள் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம்நடத்தினர்.

சிறப்பாசிரியர்களுக்கான உடற்கல்வி, இசை, ஓவியம், தையல் ஆகிய நான்கு பிரிவுகளின் கீழ் 1,300 பேரை நியமனம் செய்வதற்கான போட்டித் தேர்வு 2017-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்றது.இந்தத் தேர்வினை 30 ஆயிரம் பேர் எழுதினர். அவர்களில் தகுதி வாய்ந்தவர்களின் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் 2018-ஆம் ஆண்டு வெளியிட்டது.

ஆனால், இதுவரை அவர்களுக்கு பணி நியமனம் வழங்கப்படவில்லை.எனவே, தங்களுக்குப் பணி நியமனம் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.அப்போது, தங்களுக்குப் பணி நியமனம் வழங்க வேண்டி பல்வேறு முறை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி உள்ளோம். ஆனால், இதுவரை பணி வழங்கவில்லை. இந்த முறையாவது பணி வழங்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.

3 comments:

 1. எந்த தேர்வுக்கு எல்லாம் rescan செய்யப்பட்டு, முறைகேட்டாளர்கள் நீக்கப்பட்டார்களோ

  அதற்கெல்லாம் போஸ்டிங் போடாமல் இழுத்தடிக்கப்படுகிறது

  1)TET 2017 -இரண்டாம் கட்ட தேர்வு
  2)Polytechnic- court case இவர்களே போட்டு, அதையே காரணம் காட்டி தள்ளிவைப்பு
  3)special teacher - court case காரணம் சொல்லப்படுகிறது


  ஒருவேளை.. முறைகேட்டாளர்களை உள்ளே விட்டிருந்தால் இந்நேரம் அரசு துரிதமாக வேலை கொடுத்திருக்கும்

  example... PGTRB 2017

  ReplyDelete
 2. Tet 2013,2017 poradinal nalla

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி