தண்ணீர் பற்றாக்குறை - அனைத்து பள்ளிகளிலும் ஆய்வு: அமைச்சர் செங்கோட்டையன் தகவல் - kalviseithi

Jun 16, 2019

தண்ணீர் பற்றாக்குறை - அனைத்து பள்ளிகளிலும் ஆய்வு: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்


தண்ணீர் பற்றாக்குறை குறித்து திங்கட்கிழமை முதல்  அனைத்து பள்ளிகளிலும் ஆய்வு பணி நடைபெறும் என  அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

கோபி அருகே உள்ள நம்பியூரில் மாணவர்களுக்கு இலவச ேலப்டாப் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அளித்த பேட்டி:தமிழகத்தில் எந்த பள்ளியிலும் குடிநீர் பற்றாக்குறை இல்லை.

குடிநீர் தட்டுப்பாடு என்ற தகவல் இதுவரை எங்கள் கவனத்திற்கு வரவில்லை. அதுபோன்ற நிலை குறித்து தகவல் வந்தால் 24 மணி நேரத்தில் சரி செய்யப்படும். தண்ணீர் பற்றாக்குறை குறித்து திங்கட்கிழமை முதல்  அனைத்து பள்ளிகளிலும் ஆய்வு பணி நடைபெறும். காஞ்சிபுரத்தில் ஒரு பள்ளிக்கு இன்று விடுமுறைதினம் என்பதால்தான் விடுமுறை விடப்பட்டுள்ளது.தண்ணீர் பற்றாக்குறையால் இல்லை.

இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி