புதிய பள்ளிப் பாட புத்தகங்கள்..ஏகப்பட்ட பிழைகளால் சர்ச்சை..! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 16, 2019

புதிய பள்ளிப் பாட புத்தகங்கள்..ஏகப்பட்ட பிழைகளால் சர்ச்சை..!


தமிழ்நாடு அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள புதிய பள்ளிப் பாட புத்தக்கத்தில் பிழைகள் இருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.தமிழ்நாடு அரசு சார்பில் புதிய புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு வந்தது.

இந்தப் புத்தகங்கள் நடப்பு கல்வியாண்டு முதல் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.இந்தப் புத்தகங்களில் நிறையே எழுத்து பிழைகள் மற்றும் வரலாற்று பிழைகள் இருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளதுஉதாரணமாக ஒரு சில புத்தகங்களில் வாக்கிய பிழைகள் மற்றும் எழுத்து பிழைகள் உள்ளனஅதிலும் குறிப்பாக ஆங்கில புத்தகத்தில் ஆங்கிலத்தின் தரம் மிகவும் குறைந்திருப்பதாக ஆங்கில ஆசிரியர்கள் பலர் தெரிவித்துள்ளனர்.

அதேபோல 8ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடப் புத்தக்கத்தின் பக்கம் எண் 166ல், '1857 புரட்சியின் போது இஸ்லாமிய தலைவர்கள் இந்தியாவில் இஸ்லாமிய ஆட்சியை நிறுவ முற்பட்டனர்' என்று எந்தவித ஆதாரமும் இன்றி வரலாறு தவறாக கொடுக்கப்பட்டுள்ளது என புகார் எழுந்துள்ளது.மேலும் 8ஆம் வகுப்பு அறிவியல் பாடத்தில் கிராஃபைட் மின்சாரத்தை கடத்தும் என்று சரியாக அச்சடிக்கப்பட்டுள்ளது.எனினும் 9ஆம் வகுப்பு தமிழ் வழி அறிவியல் புத்தக்கத்தின் 178-வது பக்கத்தில் கிராஃபைட் மின்சாரத்தை கடத்தாது என்று தவறாக கொடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் 7ஆம் வகுப்பின் சமூக அறிவியல் புத்தகத்தின் 210வது பக்கத்தில் 'ஹிந்தி இந்தியாவின் ஆட்சிமொழி' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.ஆனால் இந்தியாவில் ஹிந்தி மற்றும் ஆங்கிலம் ஆட்சி மொழியாக உள்ளன.

இந்தப்புத்தகத்தில் ஆங்கில மொழியை பற்றி குறிப்பிடவில்லை. இந்தப் புத்தகத்தில் உள்ள தவறுகள் குறித்து பல ஆசிரியர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.இதனையடுத்து இந்தப் புத்தகங்கள் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளன.

1 comment:

  1. Art343. Official language of the Union.

    (1) The official language of the Union shall be Hindi in Devanagari script. The form of numerals to be used for the official purposes of the Union shall be the international form of Indian numerals.
    (2) Notwithstanding anything in clause (1), for a period of fifteen years from the commencement of this Constitution, the English language shall continue to be used for all the official purposes of the Union for which it was being used immediately before such commencement:
    Provided that the President may, during the said period, by order authorise the use of the Hindi language in addition to the English language and of the Devanagari form of numerals in addition to the international form of Indian numerals for any of the official purposes of the Union.
    (3) Notwithstanding anything in this article, Parliament may by law provide for the use, after the said period of fifteen years, of:
    (a) the English language, or
    (b) the Devanagari form of numerals,
    for such purposes as may be specified in the law.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி