தமிழகத்தை மிரட்டும் தண்ணீர் பிரச்சனை.. பள்ளிகளுக்கு விடுமுறையா? அமைச்சர் விளக்கம்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 15, 2019

தமிழகத்தை மிரட்டும் தண்ணீர் பிரச்சனை.. பள்ளிகளுக்கு விடுமுறையா? அமைச்சர் விளக்கம்!


தண்ணீர் பிரச்சனையால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுவதாக வெளியான தகவலுக்கு அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார்.சென்னையில் சொல்ல முடியாத அளவுக்கு தண்ணீர் பஞ்சம் நிலவி வருகிறது. அன்றாட தேவை, குடிநீர் என அனைத்திற்கும் குடங்களுடன் அலைந்து வருகின்றனர்மக்கள்.

தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க தமிழக அரசு திருவள்ளூர் உள்ளிட்ட பக்கத்து மாவட்ட விவசாயிகளின் போர் குழாய்களில் இருந்து தண்ணீர் பெற்று வருகிறது. இதேபோல் சிக்கராயபுரம் உள்ளிட்ட கல்குவாரிகளில் இருந்தும் தண்ணீரை பெற்று மக்களின் தாகத்தை போக்கி வருகிறது.பள்ளிகளும் தண்ணீர் பிரச்சனையில் இருந்து தப்பவில்லை. மாணவர்களுக்கு புத்தகப் பையோடு குடிக்க தண்ணீர் பாட்டீலையும் கொடுத்து அனுப்புமாறு பெற்றோர்களின் செல்போனுக்கு குறுந்தகவல்களை பள்ளி நிர்வாகம் அனுப்பியது.

பள்ளிகளுக்கு விடுமுறை

இந்நிலையில் பள்ளிகளில் ஏற்படும் தண்ணீர் பிரச்சனைக்கு பெற்றோர் ஆசிரியர் கழம் மூலம் தீர்வு காணப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் நேற்று அறிவித்தார். இதைத்தொடர்ந்து தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பிரச்சனையால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுவதாக ஒரு தகவல் தீயாய் பரவியது.அமைச்சர் மறுப்புஇந்நிலையில் இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார். கோபிச்செட்டி பாளையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன் தண்ணீர் பிரச்சனையால் பள்ளிகளுக்கு விடுமுறை என வெளியான தகவல் தவறானதுஎன்றார்.

அது ஒரு வதந்தி

மேலும் அது ஒரு வதந்தி என்றும் அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். தமிழகத்தில் சில பள்ளிகளில் தண்ணீர் பிரச்சனை இருப்பதாக தகவல்கள் வருகிறது என்ற அவர், தண்ணீர் தேவையை பூர்த்தி செய்துக்கொள்ள பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

ஜூன் 17 முதல் ஆய்வு

தண்ணீர் பிரச்சனையை போக்க பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் நிதியை பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். பள்ளிகளில் உள்ள தண்ணீர் பிரச்சனை குறித்து ஜூன்17 ஆம் தேதி முதல் அதிகாரிகள் ஆய்வு பணிகளை மேற்கொள்ளவுள்ளனர் என்றும் பள்ளிகளில் தண்ணீர் பிரச்சனை குறித்து தெரிவித்தால் 24 மணி நேரத்தில் சரி செய்யப்படும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

4 comments:

  1. ஸ்டாலின் வந்தாலும் மழை பெய்யாது

    ReplyDelete
  2. எங்கள் பள்ளியில்தண்ணீர் பிரச்சினை உள்ளது குடிக்க நீர் இல்லை.
    தண்ணீர் உள்ளது ஆழ்துளை கிணற்றில்.
    ஆள்துளை கிணறு ரிப்பேர் ராக் உள்ளது .
    சரி செய்ய நிதி யாரிடம் கேட்பது நன்றி

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி