மீன்வளப் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை கலந்தாய்வு 'ஜூலை 14-இல் தொடக்கம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 4, 2019

மீன்வளப் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை கலந்தாய்வு 'ஜூலை 14-இல் தொடக்கம்


நாகப்பட்டினம், தமிழ்நாடு மீன்வ ளப் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை கலந்தாய்வு ஜூலை 14, 15, 16 ஆகிய தேதிகளில் நடைபெறும் என மீன்வளப் பல்க லைக்கழக துணைவேந்தர் சுக. பெலிக்ஸ் தெரிவித்துள்ளார். - இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மீன்வளப் பல்கலைக்கழகத்தின் இளநிலை பட்டப்படிப்புக் ளுக்கானமாணவர் சேர்க்கைகலந்தாய்வு சென்னை, வாணியஞ் சாவடியில் உள்ள மீன்வள முதுநிலை பட்டப்படிப்பு நிலையத்தில் (Institute of Fisheries Postgraduate Studies) ஜூலை 14, 15, 16 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.

| இளநிலை மீன்வள அறிவியல் (பி.எப்.எஸ்சி) பட்டப்படிப் புக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு ஜூலை 14ஆம் தேதி யும், இளநிலை மீன்வளப் பொறியியல், இளநிலை ஆற்றல் மற் றும் சுற்றுச்சூழல் பொறியியல், இளநிலை மீன்வள மாலுமி கலை தொழில்நுட்பவியல் ஆகிய பட்டப்படிப்புகளுக்கான கலந்தாய்வு ஜூலை 15-ஆம் தேதியும் நடைபெறுகின்றன. இளநிலை உயிர்த் தொழில்நுட்பவியல், இளநிலை உணவு தொழில்நுட்பவியல், இளநிலை வணிக நிர்வாகவியல் ஆகிய பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு ஜூலை 16-ஆம் தேதி நடைபெறுகிறது.

 இளநிலைமீன்வள அறிவியல் பட்டப்படிப்புக்கு 285 பேருக் கும், இளநிலை மீன்வளப் பொறியியல் பட்டப்படிப்புக்கு 145 பேருக்கும், இளநிலை உயிர்த் தொழில்நுட்பவியல் பட்டப்ப டிப்புக்கு 1 58 பேருக்கும், இளநிலை உணவு தொழில்நுட்பவி யல் பட்டப்படிப்புக்கு 167 பேருக்கும், இளநிலை ஆற்றல் மற் றும் சுற்றுச்சூழல் பொறியியல் பட்டப்படிப்பு, இளநிலை மீன் வள மாலுமிகலை தொழில்நுட்பவியல் பட்டப்படிப்பு ஆகியவற்றுக்கு தலா 104 பேருக்கும், இளநிலை வணிக நிர்வாகவியல் பட்டப்படிப்புக்கு 75 பேருக்கும் கலந்தாய்வில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்த அனைத்து விவரங்களும் www.tnjifu.ac.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு பிரி வின் கீழ் கொடுக்கப்பட்டுள்ள கட்-ஆப் மதிப்பெண் மற்றும் அதற்கு மேல் மதிப்பெண் பெற்றவர்கள் இந்தக் கலந்தாய்வில் பங்கேற்கலாம். கலந்தாய்வுக்கான அழைப்புக் கடிதத்தை பல்கலைக்கழக இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அழைப் புக் கடிதம் தபால் மூலம் அனுப்பப்படாது என அவர் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி