அரசுக்கல்லூரிகளில் 4,600 உதவி பேராசிரியர் காலியிடங்கள் - kalviseithi

Jul 11, 2019

அரசுக்கல்லூரிகளில் 4,600 உதவி பேராசிரியர் காலியிடங்கள்


தமிழகம் முழுவதும் உள்ள அரசுக்கல்லூரிகளில் 2013ம் ஆண்டுக்கு பின் உதவி பேராசிரியர் காலியிடங்கள் நிரப்பப்படவில்ைல என்று தேர்வர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதுதொடர்பாக தேர்வர்கள், கவுரவ விரிவுரையாளர்கள் கூறியதாவது:

தமிழகத்தில் அரசுக்கல்லூரிகளில் உதவி பேராசிரியராக பணியில் சேர மாநில அரசு நடத்தும் செட் தேர்வு அல்லது தேசிய அளவில் நேசனல் டெஸ்டிங் ஏஜென்சி நடத்தும்  நெட் தேர்வில் தேர்ச்சி பெற்றிக்க வேண்டும் அல்லது அத்துடன் பி.எச்டி பட்டம் பெற்றிருக்க வேண்டும். 2010ம் ஆண்டுக்கு பின்னர் தமிழகத்தில் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரி உதவி பேராசிரியர் பணிகள் பெரிய அளவில்  நிரப்பப்படவில்லை. 2010, 2012ம் ஆண்டுகளில் கோவை பாரதியார் பல்கலைக்கழகம் செட் தேர்வு நடத்தியது. 2013ம் ஆண்டில் அறிவிக்கை  வெளியிடப்பட்டு 2015ம் ஆண்டு ஒரே ஒரு முறை மட்டுமே ஆயிரம் பேர் உதவி  பேராசிரியர்  பணியிடங்கள் நிரப்பப்பட்டது. அதைத்தொடர்ந்து உருவான காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவில்லை.

2016 முதல் 2018 வரை 3 ஆண்டுகள் கொடைக்கானல் அன்ைன தெரசா பல்கலைக்கழகம் செட் தேர்வை நடத்தியுள்ளது. அதைத்தொடர்ந்து உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. தமிழகத்தில் கடந்த 9 ஆண்டுகளில் செட், நெட்  தேர்வுகளில் தேர்ச்சி பெற்றும் பி.எச்டி முடித்து 35,000 பேர் வரை உதவி பேராசிரியர் நியமனத்துக்காக காத்திருக்கின்றனர்.தமிழக அரசுக்கல்லூரிகளில் கடந்த சில ஆண்டுகளில் புதிய படிப்புகள் பல தொடங்கப்பட்டுள்ளன. அவற்றின் மூலம் 3  ஆயிரம் காலிப்பணியிடங்கள் உருவாகியுள்ளன. அதே போல் நகர்புறங்களில் உள்ள அரசுக்கல்லூரிகளில் இரண்டு ஷிப்ட் முறை அமல்படுத்தப்பட்டு அனைத்து கல்லூரிகளிலும் 1600 பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் கவுரவ  விரிவுரையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். செட், நெட், பி.எச்டி தேர்ச்சி பெற்ற 35,000 பேரில் 5 ஆயிரம் பேர் வரை தனியார் கல்லூரிகளில் குறைந்த சம்பளத்துக்கு பணிசெய்து வருகின்றனர். மற்றவர்கள் தங்களின் படிப்புக்கு சம்பந்தம் இல்லாத வேலைகளை செய்து வருகின்றனர். இதனால்  தமிழக அரசு காலியாக உள்ள உதவி பேராசிரியர்கள் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். இவ்வாறு தேர்வர்கள், கவுரவ விரிவுரையாளர்கள் கூறினர்.

10 comments:

 1. வணக்கம்
  குறைந்த கட்டணத்தில்
  E-TDS தாக்கல் செய்ய அனுகவும் .கீழ்கண்ட சேவைகள் அளிக்கிறோம்

  1.TDS மற்றும் FORM 16 செய்ய ஒரு நபருக்கு ரூ 100 மட்டும்.
  2.IT RETURN - Rs 200/Person
  3. Form 10E
  4.Income Tax Notice - Ratification

  **அனைத்து சேவைகள் e-mail and what's up மூலம் செய்து தரப்படும்

  தொடர்புக்கு

  6383466805

  ReplyDelete
 2. தமிழக அரசு கல்லூரிகளில் காலியாக உள்ள உதவி பேராசிரியர் பணியிடங்கள் டி.ஆர்.பி. தேர்வு மூலம் நிரப்பப்படும். #TNGovt
  #HigherEducation

  https://t.co/4nJON1XrMK

  ReplyDelete
  Replies
  1. epadiyo oru 1000 posting yavathu fill panuna nallathu.. mostly 90% college teachers patrakurai ulathu..

   Delete
 3. 2021க்குள் உதவிப் பேராசிரியர் நியமனங்களை எழுத்து தேர்வு மூலம் அரசு நிரப்ப வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்...

  ReplyDelete
 4. Sir college trb exam ha or interview method ha

  ReplyDelete
 5. மத்திய அரசின் வழிகாட்டுதலின் படி மாநில அரசு வெய்டேஜ் முறை மற்றும் நேர்காணல் முறையில் உதவிப் பேராசிரியர் தேர்வு முறை இருக்குமென நினைக்கிறேன்.....

  ReplyDelete
  Replies
  1. 15th June kp anbalagan tweet. தமிழக அரசு கல்லூரிகளில் காலியாக உள்ள உதவி பேராசிரியர் பணியிடங்கள் டி.ஆர்.பி. தேர்வு மூலம் நிரப்பப்படும். #TNGovt
   #HigherEducation

   https://t.co/4nJON1XrMK

   Delete
  2. sir exam ma or interview va

   Delete
 6. இப்போதைக்கு எடுக்க மாட்டார்கள்.....அரசிடம் பணம் இல்லை.....

  MGR நூற்றாண்டு விழா எடுக்க.... வீண் செலவு செய்ய பணம் இருக்கும் அரசுக்கு ,ஊழியர்கள் தேவைகளை பூர்த்தி செய்ய பணம் இருக்காது பணி இடங்களையும் பூர்த்தி செய்ய மாட்டார்கள்....

  ReplyDelete
 7. Ugc net exam passed in tamil dept 2012 ennum kidaigala enimelathu kidaiguma

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி