School Morning Prayer Activities - 11.07.2019 - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 11, 2019

School Morning Prayer Activities - 11.07.2019


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 11.07.19

திருக்குறள்


அதிகாரம்:புகழ்

திருக்குறள்:236

தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று.

விளக்கம்:

எந்தத் துறையில் ஈடுபட்டாலும் அதில் புகழுடன் விளங்கவேண்டும்; இயலாதவர்கள் அந்தத் துறையில் ஈடுபடாமல் இருப்பதே நல்லது.

பழமொழி

Many strokes fell mighty oaks

சிறு உளி மலையைப் பிளக்கும்.

இரண்டொழுக்க பண்புகள்

1. எண்ணும் எழுத்தும் இரண்டு கண்கள் என திருவள்ளுவர் கூறியுள்ளார் எனவே அதை கருத்தாக படிப்பேன்.

2. என் ஆசிரியர்கள் எனக்கு சொல்லி தருவதும் என்னை கண்டிப்பதும் என் வாழ்வின் நலன் கருதி எனவே அவர்களுக்கு கீழ் படிந்து நடப்பேன்.

பொன்மொழி

ஆச்சரியங்களைக் கண்டு வியப்படையாமல் ,அதன் தொடக்கப் புள்ளியிலிருந்து ஆராய்வதில் தான் வெற்றியாளனின் பயணம் தொடர்கிறது.

 பொது அறிவு

ஜூலை 11- இன்று உலக மக்கள் தொகை தினம்

1. உலக மக்கள் தொகை எவ்வளவு?

இன்றைய நிலவரப்படி 753 கோடி.

2.இந்தியாவின் மக்கள்தொகை எவ்வளவு?

 135 கோடி (இன்றைய நிலவரப்படி)

English words & meanings

*Yen - strong desire, Japanese currency, அதிக ஆசை, ஜப்பானிய நாணயம்

* Yum - expression used to appreciate the taste of food, உணவின் ருசியை வெளிப்படுத்தும் வார்த்தை.

ஆரோக்ய வாழ்வு

ஒரு  டீஸ்பூன் கறிவேப்பிலை பாெடியை  தேனில்  கலந்து தினமும்  2  வேளை சாப்பிட்டு வந்தால்  உடலில் தேங்கியிருக்கும் சளி முறிந்து  வெளியேறி  விடும்.

Some important  abbreviations for students

* ELPE - English Language Placement Exam

* GATE - Graduate Aptitude Test in Engineering

நீதிக்கதை

ஒரு குளக்கரை.

கரையோரத்தில் கிழக்கொக்கு ஒன்று விசனமுடன் ஒற்றைக் காலில் நின்று கொண்டிருந்தது.

துள்ளிக் கொண்டிருந்த மீன்களில் ஒன்றுக்கு சந்தேகம் வந்தது. “நம்மைச் சும்மாவிடாதே, ஆனால் செயலற்று நின்றுள்ளதே என்னவாக இருக்கும்” என்று. “நமக்கேன்” என்று இராமல் அதன்முன் வந்தது. “என்ன கொக்காரே! உன் ஆகாரத்தைக் கொத்தாமல் சும்மா நிற்கிறீர்?” என்றது.

“நான் மீனைக்கொத்தித் தின்பவன்தான், ஆனாலும் இன்று எனக்கு மனசு சரி இல்லை” என்றது கொக்கு.

“மனசு சரி இல்லையா… ஏன்?’ என்றது மீன்.

“அதைஏன் கேட்கிறாய்…” என்று பிகு பண்ணியது கொக்கு.

“பரவாயில்லை சொல்லுங்களேன்”

“சொன்னால் உனக்குத் திக் என்றாகும்.”

மீனுக்குப் பரபரத்தது.

“சொன்னால்தானே தெரியும்”

“வற்புறுத்திக் கேட்பதாலே சொல்கிறேன். இப்போது ஒரு செம்படவன் இங்கே வரப்போறான்…” என்று இழுத்தது கொக்கு.

“வரட்டுமே”

“என்ன வரட்டுமே? உங்களையெல்லாம் ஒட்டுமொத்தமாகப் பிடித்துச் சென்றுவிடப் போகிறான்.”

“அய்யய்யோ!”

உடனே அம்மீன் உள்ளே சென்றுவிட்டது.

சில நிமிடங்கள் ஆகி இருக்கும்; பல மீன்கள் அதன்முன் துள்ளின.

அதுமட்டுமா! ஒட்டுமொத்தமாக “நீயே எங்களையெல்லாம் அந்த அபாயத்திலிருந்து காப்பாற்றேன்” என்று கெஞ்சின. அபாயம் சொன்னவனே உபாயமும் சொல்வான் என்று அவைகள் யோசித்து கொக்கிடம் உதவி கேட்டன.

“நான் என்ன செய்வேன்? என்னால் செம்படவனோடு சண்டை போடா முடியாது. கிழவன் நான். வேண்டுமென்றால் உங்களை இக்குளத்திலிருந்து வேறொரு குளத்துக்குக் கொண்டு போகலாம். அதனால் எனக்கும் இந்தத் தள்ளாத வயதில் பரோபகாரி என்ற பெயரும் வரும்; நீங்களும் பிழைத்திருப்பீர்கள்” என்றது கொக்கு மிகவும் இறக்கம் கசிய.

மீன்கள் எல்லாம் தம் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள அதன் பேச்சை நம்பின.

“அபாயத்தை அறிந்து சொன்ன நீங்களே உபாயத்தையும் தெரிந்து சொல்கிறீர்கள்; அப்படியே செய்யுங்கள்” என்றன ஒருமித்தக் குரலில்.

கொக்குக்கும் கசக்குமா காரியம்?

நடைக்கு ஒவ்வொன்றாக குளத்திலிருந்த மீன்களையெல்லாம் கௌவிக் கொண்டுபோய் சில மீன்களைத் தின்று, மற்ற மீன்களை ஒரு பாறையில் உலரவைத்தது.

குளத்திலிருந்த நண்டு ஒன்று இதை கவனித்தது. அதற்கும் வேறு குளத்திற்குச் செல்ல உள்ளுக்குள் ஆசை சுரந்தது.

“ஓ சீவகாகுண்யனே! என்னையும் அவ்விடத்திற்குக் கொண்டுபோங்கள்” என்று கெஞ்சியது.

வருங்காலத்தில் எதுவும் வழிய வரும் – என்று உள்ளுக்குள் துள்ளிக் கொண்ட கொக்கு, நண்டையும் கௌவிக்கொண்டு பறந்தது.

பறக்கும் பொது வழியில் மீன்களின் முள்ளுடல்கள் ஆங்காங்கே சிதறி இருப்பதைக் கண்டது நண்டு.

அதற்க்கு “பக்”கென்றது. அத்துடன் வேறு நீர்நிலைக்குக் கொண்டுச் செல்வதாகக் கூறி மீன்களைத் தின்றுவிடும் கொக்கின் வஞ்சகம் நண்டுக்குச் “சட்”டென்று புரிந்துவிட்டது. தன் நிலையம் அப்படித்தானா?

உயிராசையால் நண்டுக்கு ஒரு உபாயம் தோன்றியது. வைரத்தை வைரத்தால் அறுப்பதுபோல் அதற்கு மூளை வேலை செய்தது.

“கொக்காரே! நீங்கள் என்மேல் இரக்கப்பட்டு எடுத்துக்கொண்டு வந்தீர்கள். அங்கே என் உறவினர்கள் பலர் இருப்பதால், என்னை மீண்டும் அங்கே கொண்டு சென்றால் அவைகளையும் காண்பிப்பேன்” என்றது நண்டு.

“அப்படியா? இன்னும் இருக்கிறதா நண்டுகள்?”

“எனக்கு உறவினர்கள் அதிகம்; பல இருக்கின்றன.”

“ஆஹா! அதிர்ஷ்டம் என்றால் இப்படித்தான் வரவேண்டும்; நம்பாடு யோகம்தான்” என்று மகிழ்ந்த கொக்கு மீண்டும் நண்டைக் கௌவிக் கொன்று பழைய குளத்தை நோக்கிப் பறந்தது.

குளத்துக்கு நேராக வரும்போது

அதுவரை மண்டுபோலிருந்த நண்டு தன் கொடுக்கினால் கொக்கின் கழுத்தை இரண்டு துண்டாக்கிவிட்டு குளத்து நீரில் விழுந்து உயிர் பிழைத்துக் கொண்டது.

அபாயம் சொன்னவனிடமே உபாயம் கேட்ட மீன்கள் செத்தன.

வஞ்சமனத்தானின் உபாய மும் அபயாமே என்றறிந்து கொன்றுவிட்ட நண்டு பிழைத்தது.

வியாழன்

அறிவியல் & கணினி

ராக்கெட் எப்படி மேலே செல்கிறது? தெரிந்துகொள்ள ஆசையா? ஒரு சிறிய சோதனை செய்து பார்த்துவிடுவோமே.

பலூன் ராக்கெட் காண இங்கே கிளிக் செய்யவும்

தேவையான பொருட்கள்:

நீளமான பலூன், நூல் கண்டு, உறிஞ்சு குழல், பசை டேப்.

சோதனை:

1. ஒரு நீளமான பலூனை போதுமான அளவுக்கு ஊதி, காற்று வெளியே போகாதவாறு அதன் வாயை விரல்களால் பிடித்துக் கொள்ளுங்கள்.

2. ஊதிய பலூன் மீது நீண்ட உறிஞ்சு குழலை வைத்துப் பசை டேப்பால் ஒட்டிவிடுங்கள்.

3. உறிஞ்சு குழல் வழியே நூலைச் செருகி நூலின் இரு முனைகளையும் ஜன்னல் கம்பியில் கட்டி விடுங்கள்.

4. பலூனின் வாய்ப் பக்கத்தை ஜன்னல் கம்பிக்கு அருகே கொண்டு வாருங்கள்.

5. பத்தில் இருந்து (10, 9, 8, .... 2, 1) இறங்கு வரிசையில் எண்களைச் சொல்லுங்கள். பூஜ்ஜியம் வந்தவுடன் பலூனிலிருந்து கையை எடுத்து விடுங்கள்.

இப்போது என்ன நடக்கிறது என்று பாருங்கள். நொடிப் பொழுதில் பலூன் சீறிப் பாய்ந்து எதிர் ஜன்னலில் போய் நிற்கும்.

நடந்தது என்ன?
நியூட்டனின் மூன்றாம் விதி. அதன் படி ""ஒரு  வினை நடக்கும் போது அதற்கு இணையான மாற்று வினை நடக்கும்.

கணினி சூழ் உலகு

ஆங்கிலத்தை விளையாட்டின் மூலம் கற்பிக்க ஆர்வம்? இதோ அதற்கான தளம்....

https://www.gamestolearnenglish.com/

இதில் English grammar அனைத்திற்கும் பல விளையாட்டுகள் உள்ளன.

இன்றைய செய்திகள்

11.07.2019

* நாடு முழுவதும் ஏடிஎம் மையங்கள் படிப்படியாக மூடல்... செலவினங்களை தவிர்க்க வங்கிகள் நடவடிக்கை.

* உத்தரபிரதேசத்தை சேர்ந்த 13 வயது சிறுவன் மிரிகேந்திர ராஜ்,  100 புத்தகங்களுக்கு மேல் எழுதி சாதனை புரிந்துள்ளார்.

* மதுரை மாவட்டத்தில் கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவ, மாணவிகள் அரசு வழங்கும் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

* உலகக்கோப்பை கிரிக்கெட்: இந்திய அணியை 18 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து அணி.

* காமன்வெல்த் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் தொடரின் மகளிர் சீனியர் 49 கிலோ எடை பிரிவில், இந்திய வீராங்கனை மீராபாய் சானு தங்கப் பதக்கம் வென்றார்.

Today's Headlines

🌸Gradual closure of ATM centers across the country .It is due to reduce the bank expenses

 🌸13-year-old Mirikendra Raj,  from Uttar Pradesh, wrote more than 100 books and it was great achievement

 🌸It has been announced that students studying in educational institutions in Madurai district can apply for government scholarships.

 🌸 World Cup Cricket: New Zealand advanced to the final by beating India by 18 runs.

 🌸In the women's Commonwealth Weightlifting Championships, Meerabai Chanu won the gold medal in the 49 kg category.

Prepared by
Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி