அரசு சட்டக் கல்லூரிகளில்  5 ஆண்டு சட்ட படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு கலந்தாய்வு ஜூலை 8-ம் தேதி தொடங்குகிறது - kalviseithi

Jul 3, 2019

அரசு சட்டக் கல்லூரிகளில்  5 ஆண்டு சட்ட படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு கலந்தாய்வு ஜூலை 8-ம் தேதி தொடங்குகிறது


அரசு சட்டக்கல்லூரிகளில் வழங்கப் படும் 5 ஆண்டு சட்டப்படிப்புக் கான தரவரிசை பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. பிடித்தமான கல்லூரியைத் தேர்வுசெய்வதற்கான கலந்தாய்வு ஜூலை 8-ம் தேதி தொடங்கும் என சட்டப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் சென்னை (பட் டரை பெரும்புதூர், புதுப்பாக்கம்), மதுரை, திருச்சி, கோவை, திருநெல்வேலி, செங்கல்பட்டு, வேலூர், தருமபுரி, ராமநாதபுரம், விழுப்புரம் ஆகிய இடங்களில் அரசு சட்டக் கல்லூரிகள் உள்ளன. இங்கு 5 ஆண்டு இளங்கலை சட்டப் படிப்பு (பிஏ.எல்எல்பி) வழங்கப்படுகிறது. நடப்பு கல்வி ஆண்டில் (2019-2020) இப்படிப்புகளில் சேர 7,690 பேர் விண்ணப்பித்தனர். அவர்களில் 7,371 பேரின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன. தகுதியின்மை மற்றும் குறைபாடு காரணமாக, 319 பேரின் விண்ணப்பங்கள் நிரா கரிக்கப்பட்டன. இந்நிலையில், 5 ஆண்டு கால சட்டப் படிப்புக்கு விண்ணப்பித்த தகுதியான நபர்களின் தர வரிசைபட்டியலை தமிழ்நாடு டாக் டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகம், இணையதளத்தில் (www.tn dalu.ac.in) நேற்று வெளியிட்டது.

தேர்வர்கள் தங்கள் விண்ணப்ப எண்ணைபல்கலைக் கழகத்தின் இணையதளத்தில் குறிப்பிட்டு தரவரிசையை அறிந்து கொள்ளலாம். இதுதொடர்பாக தமிழ்நாடு சட்டப் படிப்பு மாணவர் சேர்க்கை தலைவர் டி.சங்கர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது: அரசு கல்லூரிகளில் 5 ஆண்டு சட்டப் படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. விருப்பமான கல்லூரியைத் தேர்வு செய்வதற்கான கலந்தாய்வு ஜூலை 8-ம் தேதி தொடங்கி 11-ம் தேதி நிறைவடையும். கலந்தாய்வுக்கு இடஒதுக்கீட்டுப் பிரிவு வாரியான கட்-ஆஃப் மதிப் பெண்ணும் கலந்தாய்வு தேதி யும் வெளியிடப்பட்டுள்ளது. காத்திருப்போர் பட்டியலில் இடம்பெற்றவர்களுக்கான கலந் தாய்வு ஜூலை 16-ம் தேதி நடைபெறும். கலந்தாய்வு தொடர்பாக சம்பந்தப்பட்ட மாணவர் களுக்கு விரைவு தபால் மூலம் கலந்தாய்வுக் கடிதம் அனுப்பப் பட்டுள்ளது.

உரிய கட்-ஆஃப் மதிப் பெண்ணுக்குள் இருந்தும் கலந் தாய்வுக் கடிதம் கிடைக்கப் பெற வில்லை என்றால் அத்தகைய மாணவர்கள் குறிப்பிட்ட தேதியில் கலந்தாய்வில் நேரடியாகக் கலந்துகொள்ளலாம். ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் ஒரே கட்-ஆஃப் மதிப்பெண் பெற்றிருக்கும் சூழலில் வயதில் மூத்தவர்களுக்கு கலந்தாய்வில் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி