ஆசிரியர்களை கண்காணிக்க பயோமெட்ரிக் கருவி மாணவர் வருகை குறித்து பெற்றோருக்கு குறுந்தகவல் சட்டப்பேரவையில் அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 3, 2019

ஆசிரியர்களை கண்காணிக்க பயோமெட்ரிக் கருவி மாணவர் வருகை குறித்து பெற்றோருக்கு குறுந்தகவல் சட்டப்பேரவையில் அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு


அரசுப் பள்ளி மாணவர்களின் வருகை குறித்து பெற்றோருக்குஎஸ்எம்எஸ் மூலம் தகவல் அனுப் பப்படும். தொடக்கக் கல்வி ஆசிரியர்களின் வருகை பயோ மெட்ரிக் கருவி மூலம் பதிவு செய்யப்படும் என்று சட்டப் பேரவையில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட் டையன் தெரிவித்தார்.

 சட்டப்பேரவையில் பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நேற்று நடந்தது. இதில் உறுப்பினர்களின் கேள்விக ளுக்கு பதில் அளித்தும், புதிய அறிவிப்புகளை வெளியிட்டும் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறியதா வது:

தொடக்கப் பள்ளி ஆசிரியர் கள் சரியாக பள்ளிக்கு வருவ தில்லை என்று பரவலாக புகார் கூறப்படுகிறது. எனவே, அரசு தொடக்கப் பள்ளிகளில் பயோ மெட்ரிக் கருவி பொருத்தப்பட்டு, ஆசிரியர்களின் வருகைப் பதிவு கண்காணிக்கப்படும். பள்ளி ஆசிரியர்களின் வேலை நேரம் 8 மணியில் இருந்து எட்டரை மணி நேரமாக உயர்த்தப்பட்டு, அந்த அரை மணி நேரத்தில் மாணவர் களுக்கு ஆக்கமும், ஊக்கமும் அளிக்கும் வகையிலான நிகழ்ச்சிக ளுக்கு ஏற்பாடு செய்யப்படும். கல்விக்கான பிரத்யேக தொலைக்காட்சியை முதல்வர் விரைவில் தொடங்கிவைப்பார். தனியார் பள்ளிகளை முறைப் படுத்த சட்டம் இயற்றி, குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அரசுப் பள்ளி களில் சுற்றுச்சுவர், கழிப்பிடங்கள் கட்டும் பணி 5 கட்டங்களாக மேற் கொள்ளப்படும். ஐஏஎஸ் படிக்க விரும்புவோருக்காக அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஆன்லைன் பயிற்சி அளிக்கப்படும். கல்வி மாவட்ட அளவில் 88 மாதிரிப் பள்ளிகள் ரூ.17.60 கோடி யில் அமைக்கப்படும்.

அரசு, அரசுஉதவிபெறும் பள்ளிகளில் ஆங்கில வழியில் படிக்கும் மாணவர்களுக்கான கற்பிப்பு கட்டணம் ரத்து செய்யப்படுகிறது. சிறைக் கைதிகளுக்கு சிறப்பு எழுத்தறிவுத் திட்டம் செயல் படுத்தப்படும். அரசுப் பள்ளி மாணவர்களின் வருகை குறித்து பெற்றோருக்கு குறுந்தகவல் (எஸ்எம்எஸ்) அனுப் பப்படும். 223 மேல்நிலைப் பள்ளி களில் ரூ.45 கோடியில் அடல் டிங்கரிங்ஆய்வகங்கள் ஏற்படுத் தப்படும். மாணவர்களின் பாதுகாப்புமற்றும் அவர்கள் மீது தனிக்கவனம் செலுத்துவது குறித்து2 லட்சத்து 34 ஆயிரத்து 691 ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். அங்கன்வாடி மையங்களில் பணிபுரியும் 2,381 ஆசிரியர்க ளுக்கு எல்கேஜி, யுகேஜி வகுப்பு களுக்கான பயிற்சி அளிக்கப் படும். மேல்நிலைக் கல்வி மாணவர் களுக்கு பட்டயக் கணக்காளர் (சி.ஏ.) படிப்புக்கானவழிகாட்டு பயிற்சி அளிக்கப்படும். பெரம்பலூர் மாவட்டம்ஆலத்தூர் அடுத்த மலையப்ப நகர், நெல்லை மாவட்டம் வள்ளியூரில் புதிய உண்டு உறைவிடப் பள்ளிகள் தொடங்கப்படும்.

அனைத்து மாவட்ட மைய நூலகங்களில் செவி மற்றும் பேச்சுத்திறன் குறை உள்ளவர்களுக்கு சிறப்பு பிரிவும், சேலம் மாவட்ட மைய நூலகத்தில் குழந்தைகளுக்கான சிறப்பு நூலகமும் தொடங்கப்படும். சென்னை நேரு பூங்கா விளையாட்டு வளாகத்தில் ரூ.8.25 கோடியில் செயற்கை இழை தடகள ஓடுபாதை அமைக்கப்படும். சென்னை வேளச்சேரி நீச்சல் குள வளாகத்தில் உள்ள ஜிம்னாஸ்டிக் பயிற்சிக்கூடம் ரூ.1.50 கோடியில் தரம் உயர்த்தப்படும். இவ்வாறு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர்செங்கோட்டையன் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி