மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய பள்ளி வாகனங்களில் கண்காணிப்பு கேமராக்களை ஒரு மாதத்துக்குள் பொருத்த வேண்டும் ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 27, 2019

மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய பள்ளி வாகனங்களில் கண்காணிப்பு கேமராக்களை ஒரு மாதத்துக்குள் பொருத்த வேண்டும் ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு!


மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், அனைத்து தனியார் பள்ளி வாகனங்களில் ஒருமாதத்திற்குள் ஜி.பி.எஸ். கருவி மற்றும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும் என்றுசென்னை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

சென்னை ஐகோர்ட்டில், புரசைவாக்கத்தைச் சேர்ந்த கோபிகிருஷ்ணன் என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், “கோவையில் சமீபத்தில் பள்ளி வாகனத்தில் சென்ற மாணவி ஒருவரை, அந்த வாகனத்தின்ஓட்டுனர் மற்றும் அவரது உதவியாளர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியது. எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்களை தடுக்கும் வகையில், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து தனியார் பள்ளி பஸ்கள் உள்ளிட்ட வாகனங்களில் ஜி.பி.எஸ். கருவி மற்றும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த உத்தரவிட வேண்டும்” என்று கூறியிருந்தார்.இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் முன்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு விசாரணைக்கு வந்தது.அப்போது மனுதாரர் வக்கீல், மாணவர்களின் பயணத்தை பெற்றோர் இணையதளம் மூலமாக கண்காணிக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள அரசுக்கு உத்தரவிடவேண்டும் என்று வாதிட்டார். இதுதொடர்பாக விளக்கம் அளிக்கும்படி தமிழக பள்ளிக் கல்வித் துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டு இருந்தனர்.இந்தநிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.அப்போது, அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் கூறியதாவது:-தமிழக பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அனைத்து தனியார் பள்ளி பஸ்கள், வேன்கள் என்று அனைத்து பள்ளி வாகனங்களிலும் கண்டிப்பாக ஜி.பி.எஸ். கருவி மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவது தொடர்பாக தமிழக அரசு கடந்த 22-ந்தேதி சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.

அந்த சுற்றறிக்கையில், அனைத்து தனியார் பள்ளி வாகனங்களில் கண்காணிப்பு கேமராக்களும், ஜி.பி.எஸ். கருவியும் பொருத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பள்ளி வாகனங்களில் கண்காணிப்பு கேமராக்களும் ஜி.பி.எஸ். கருவிகளும்எல்லா நேரங்களிலும் சீராக இயங்கும் நிலையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் பள்ளி நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த கருவிகளின் மூலம் பள்ளி வாகனங்களின் போக்குவரத்தை கண்காணிக்க அனைத்து தனியார் பள்ளிகளிலும் கட்டுப்பாட்டு அறை அமைக்க வேண்டும். இந்த உத்தரவை அமல்படுத்திவிட்டு, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளும் அறிக்கை அளிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி