வரைவு தேசியக் கல்விக்கொள்கை மீது கருத்து தெரிவிக்க மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் அழைப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 13, 2019

வரைவு தேசியக் கல்விக்கொள்கை மீது கருத்து தெரிவிக்க மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் அழைப்பு


மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் மனிதவள மேம்பாட்டுத் துறை சமீபத்தில் வெளியிட்ட வரைவு தேசிய கல்விக் கொள்கை ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே வெளியிடப்படிருந்த சூழலில்,  அதனைத் தமிழாக்கம் செய்து, தமிழ் மற்றும் ஆங்கில வடிவில் www.tnscert.org என்னும் வலைத்தள முகவரியில்  மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இதனை ஆசிரியர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள், கல்வியாளர்கள் உள்ளிட்ட பலதரப்பினரும் பார்வையிட்டு இந்த வரைவு தேசியக்கல்விக்கொள்கை மீது வரும் 25 ம் தேதிக்குள் கருத்து தெரிவிக்கும்படி மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது.

மின் அஞ்சல் வழியாக கருத்து தெரிவிக்க விரும்புவர்கள் secert.nep2019@gmail.com என்னும் மின் அஞ்சல் முகவரியிலும்,
அஞ்சல் வழியில் கருத்து தெரிவிக்க விரும்புவர்கள் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் , டி.பி.ஐ.வளாகம், கல்லூரிச் சாலை,நுங்கம்பாக்கம், சென்னை-6 என்னும் முகவரியிலும் தங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம் என்னும்  அறிவிப்பை மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இவ்வரைவு தேசியக் கல்விக் கொள்கை மீதான கருத்தரங்குகள் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் மூலம் மண்டல வாரியான கருத்துக்கேட்புக் கூட்டங்கள் தமிழகம் முழுவதும் நடைபெற உள்ளது.

வரைவு தேசியக் கல்விக் கொள்கைமீது ஆசிரியர்களிடம் கருத்து கேட்கப்பட வேண்டும் என்று பலதரப்பினரும் கூறிவந்த நிலையில் தமிழ்நாடு அரசின் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இந்த அறிவிப்பு ஆசிரியர்கள்,பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி