தமிழகத்தில் இருமொழிக் கொள்கைதான் என்ற முடிவில் தமிழக அரசு உறுதியாக உள்ளது:சட்டப்பேரவையில் அமைச்சர் செங்கோட்டையன் பேச்சு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 2, 2019

தமிழகத்தில் இருமொழிக் கொள்கைதான் என்ற முடிவில் தமிழக அரசு உறுதியாக உள்ளது:சட்டப்பேரவையில் அமைச்சர் செங்கோட்டையன் பேச்சு


தமிழக சட்டப்பேரவையில் இன்று பள்ளி, உயர்கல்வி தொடர்பான மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதில் பல்வேறு அரசியல் தலைவர்கள் தங்களது கருத்தை பதிவு செய்து வந்தனர். அதன் அடிப்படையில் புதிய கல்விக்கொள்கைக்கு எதிராக, சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என திமுக உறுப்பினர் சுரேஷ் ராஜன் கோரிக்கை வைத்திருந்தார். புதிய கல்வி கொள்கையால் கடும் பாதிப்பு ஏற்படும். மாநில அரசின் உரிமைகள் பறிக்கப்படும் எனவும் கூறினார். மும்மொழிக் கொள்கை குறித்து சுரேஷ் ராஜன் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் செங்கோட்டையன் பதில் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இருமொழிக் கொள்கைதான் என்ற முடிவில் தமிழக அரசு உறுதியாக உள்ளது.

தமிழ், ஆங்கிலம், தவிர்த்து மூன்றாம் மொழியை கற்பது மாணவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும். தமிழ், ஆங்கில மொழிகள் தான் தமிழக பள்ளிகளில் கற்பிக்கப்படும். இருமொழிக் கொள்கையில் தமிழக அரசு உறுதியாக இருப்பதாக பிரதமருக்கு முதல்வர் கடிதம் எழுதியுள்ளார். தமிழகத்தில் என்றைக்கும் இரு மொழிக்கொள்கை தான், அதில் எந்த மாற்றமும் இல்லை. 1968-ம் ஆண்டு எடுக்கப்பட்ட முடிவின்படி, தமிழகத்தில் தமிழ், ஆங்கிலம் என்ற இருமொழிக்கொள்கை  அமலில் உள்ளது. இதில் எந்த மாற்றமும் வராது. நாங்கள் உறுதியாக இருக்கிறோம் எனவும் கூறியுள்ளார்.

1 comment:

  1. 2004 முதல் நடுநிலை பள்ளிகளில் நேரடி நியமனம் பெற்ற பட்டதாரி ஆசிரியர்களின் கோரிக்கை

    தொடக்க கல்வித்துறையில் நடுநிலை பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு
    மாவட்டம் விட்டு மாவட்டம்,ஒன்றியம் விட்டு ஒன்றியம், கலந்தாய்வில் பொது மாறுதல் நடத்திய பிறகு இடைநிலை ஆசிரியர்களுக்கு பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு வழங்குதல்.

    தொடக்கக்
    கல்வித்துறையில் SSA மூலம் நடுநிலை பள்ளிகளில் நேரடி நியமனம் மூலம் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் உத்தரவின் பேரில் 2004 முதல் 2012 வரை சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் தமிழகம் முழுவதும் நியமிக்கப்பட்டனர்.

    ஒரு ஒன்றியத்தில் பட்டதாரி ஆசிரியர் காலி பணியிடம் ஏற்படும்போது, கலந்தாய்வில் முதலில் இடைநிலை ஆசிரியருக்கு(JUL11) பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு வழங்கிய பின்னர் தான்

    பட்டதாரிகளுக்கு ஒன்றியம் விட்டு ஒன்றியம்(JUL15) மாவட்டம் விட்டு மாவட்டம்(JUL15)
    மாறுதல் நடத்தப்படுகிறது.

    இதன் காரணமாக தமிழகம் முழுவதும் உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் சொந்த மாவட்டத்திற்கோ, சொந்த ஒன்றியத்திற்கோ, வருவதற்கான வாய்ப்புகள் இதுநாள்வரை ஏற்படவே இல்லை.

    இதன் காரணமாக பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாறுதல் கிடைப்பதற்கான வாய்ப்புகள் இல்லாமல் போய்விடுகிறது.

    அரசு உதவி பெறும் பள்ளியில் சேர்ந்தது போல் ஒரே பள்ளியில்,ஒரே ஒன்றியத்தில் பணியாற்றுகிறோம்.

    ஆகவே ஐயா அவர்கள் பட்டதாரி ஆசிரியருக்கு மாவட்டம் விட்டு மாவட்டம் ஒன்றியம் விட்டு ஒன்றியம் பொது மாறுதல் நடத்திய பிறகு இடைநிலை ஆசிரியருக்கு பதவி உயர்வு வழங்குமாறு இயக்குனர் அவர்களை தாழ்ந்த பணிவன்புடன் வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறோம்.

    தொடர்புக்கு
    தியாகராஜன்
    9884153429
    மாநில தலைவர்

    தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்

    ஜாக்டோ ஜியோ தகவல் தொடர்பு செய்தியாளர்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி