எம்பிபிஎஸ், பிடிஎஸ் தரவரிசைப் பட்டியல்: இன்று வெளியாக வாய்ப்பு - kalviseithi

Jul 4, 2019

எம்பிபிஎஸ், பிடிஎஸ் தரவரிசைப் பட்டியல்: இன்று வெளியாக வாய்ப்பு


எம்பிபிஎஸ், பிடிஎஸ்., படிப்புகளுக்கான தர வரிசைப் பட்டியல் வியாழக் கிழமை (ஜூலை 4) வெளியாக வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. விண்ணப்பங்களைப் பரிசீலனை செய்யும் பணிகள் நிறைவடைந் திருப்பதைத் தொடர்ந்து, தரவரி சைப் பட்டியலை இணையதளத் தில் வெளியிடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருப்பதாக மருத்துவக்கல்வி இயக்குநரகதேர் வுக்குழு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளின் எம்பி பிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் நடைமுறை கடந்த 7-ஆம் தேதி தொடங்கி 20-ஆம் தேதி நிறை வடைந்தது. அதில் அரசு ஒதுக் கீட்டு இடங்களுக்கு 34,368 விண் ணப்பங்கள், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 25,388 விண்ணப் பங்கள் என மொத்தம் 59,756 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப் பட்டன. விண்ணப்பங்கள் பரிசீ லனை செய்யப்பட்டு தகுதியான மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் ஜூலை 2-ஆம் தேதி வெளியிடப்படுவதாக இருந்தது.

ஆனால், அகில இந்திய ஒதுக் கீட்டு இடங்களுக்கான கலந் தாய்வில் ஏற்பட்ட காலதாமதம் காரணமாக தரவரிசைப் பட்டி யலை வெளியிட இயலவில்லை என மருத்துவக் கல்வி வட்டா ரங்கள் தெரிவித்திருந்தன. இந்தநிலையில், அப்பட்டியல் வியாழக்கிழமை வெளியாகக்கூ டும் எனத் தெரிகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி