பள்ளிக் கல்வித்துறை உத்தரவு - ' அரசு மற்றும் உதவி பெறும் உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில் குறைந்தது 1000 புத்தகங்களுடன் நுாலகம் செயல்பட வேண்டும்' - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 5, 2019

பள்ளிக் கல்வித்துறை உத்தரவு - ' அரசு மற்றும் உதவி பெறும் உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில் குறைந்தது 1000 புத்தகங்களுடன் நுாலகம் செயல்பட வேண்டும்'


அரசு மற்றும் உதவி பெறும் உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில் குறைந்தது 1000 புத்தகங்களுடன் நுாலகம் செயல்பட வேண்டும்' என உத்தரவிடப்பட்டுள்ளது.

பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் சுற்றறிக்கை: ஒவ்வொரு அரசு மற்றும் உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளிலும் குறைந்தது 1000 புத்தகங்கள் உள்ளவாறு பள்ளி நுாலகம் செயல்பட வேண்டும்.

இந்நுாலகத்துக்கு தினமும் தமிழ் மற்றும் ஆங்கில தினசரி செய்தித்தாள் வாங்கி மாணவர்கள் படிக்க அறிவுறுத்த வேண்டும். நுாலகப் பணியை மேற்கொள்ள ஒரு ஆசிரியரை நியமித்து மாணவர்களின் நுாலகம் பயன்படுத்தும் திறனை அதிகரிக்க வேண்டும்.குறிப்பிட்ட நேரம் மாணவர்களுக்கு படிக்கும் வாய்ப்பு அளித்து வாசிக்கும் திறன் பேச்சு திறன்எழுத்து திறன் ஆங்கிலம் பேசும் திறனை மேம்படுத்தவேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி