மாணவர்களின் சாதி விவரங்கள் வெளியில் தெரிவதால் ஸ்மார்ட் அடையாளஅட்டைக்கு அரசு தடை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 11, 2019

மாணவர்களின் சாதி விவரங்கள் வெளியில் தெரிவதால் ஸ்மார்ட் அடையாளஅட்டைக்கு அரசு தடை


அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிமாணவர்களுக்கு ஸ்மார்ட் அடையாள அட்டைகள் இந்த வருடம் முதல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

 இந்த அட்டை மூலம் ஆசிரியர் மற்றும் பெற்றோர் மாணவர்கள் குறித்த அனைத்துவிவரமும் தெரிந்து கொள்ள வசதியாக டிஜிட்டல் அடையாளக் குறியீடு உள்ளது. இதற்கு  ஆங்கிலத்தில் குவிக்ரெஸ்பான்ஸ் கோட் எனப் பெயராகும்.இந்த அடையாளக் குறியீட்டைக் கொண்டு ஸ்மார்ட் தொலைப்பேசி மூலம் யாரும் மாணவர் குறித்த விவரங்கள் தெரிந்து கொள்ள முடியும் என்னும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதன் மூலம் மாணவர்களில் சாதி உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்கள் அனைத்தையும் யார் வேண்டுமானாலும் தெரிந்து கொள்ள முடியும் என்னும் நிலையில் இந்த அடையாள அட்டை உள்ளது.இது குறித்துப் பல ஆர்வலர்கள் கேள்வி எழுப்பினர். அதனால் இந்த சாதி விவரங்களை மறைக்க அரசு முடிவு செய்துள்ளது. அதையொட்டி இந்த நடவடிக்கை. முடியும் வரை அடையாளஅட்டை பயன்பாட்டுக்கு அரசு தடை விதித்துள்ளது. மேலும் இனி இந்த அடையாள அட்டைகளைப் பரிசீலனை செய்யப்பெற்றோர், மாணவர் மற்றும் ஆசிரியருக்கு மட்டுமே அனுமதி கொடுப்பது குறித்தும் அரசு ஆலோசித்து வருகிறது.

1 comment:

  1. முகமது துக்ளக்கை நினைவு படுத்துகிறது உமது அணைத்து செயல்களும்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி