NMMS - தேசிய திறனறிதல் தேர்வு அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 11, 2019

NMMS - தேசிய திறனறிதல் தேர்வு அறிவிப்பு


கல்வி உதவித் தொகைக்கான, தேசிய திறனறிதல் தேர்வு தேதியை, மத்திய அரசு அறிவித்துள்ளது.

நாடு முழுவதும், எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள், மேல்நிலையில், பிளஸ் 2 வரையிலும், அதன் பின், பட்டப் படிப்பு மற்றும் ஆராய்ச்சி படிப்பு வரையிலும், கல்வி உதவித் தொகை பெறலாம்.

இதை, மத்திய மனிதவள மேம்பாட்டு துறை சார்பில், தேசிய கல்வியியல் ஆராய்ச்சி கவுன்சிலான, என்.சி.இ.ஆர்.டி., வழங்குகிறது.இந்த கல்வி உதவித் தொகை, ஒவ்வொரு மாநில மாணவர்களுக்கும், தகுதி தேர்வின் அடிப்படையில் வழங்கப்படுகிறது. தற்போது, எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள், இந்த தகுதி தேர்வை எழுதலாம். நடப்பு கல்வி ஆண்டில், எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, தேசிய திறனறிதல் தேர்வுக்கான தேதியை, என்.சி.இ.ஆர்.டி., அறிவித்துள்ளது.அதன்படி, மாநில அளவிலான முதற் கட்ட தகுதி தேர்வு, நவ.,3ல் நடத்தப்படுகிறது.

இதில், தேர்ச்சி பெறும் மாணவர்கள், தேசிய அளவில் நடத்தப்படும் இரண்டாம் கட்ட தேர்வை எழுத வேண்டும். இந்த தேர்வு, அனைத்து மாநிலங்களிலும், அடுத்தாண்டு, மே, 10ல் நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி