எம்பிஏ படிப்புக்கான கலந்தாய்வு தொடக்கம்  - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 23, 2019

எம்பிஏ படிப்புக்கான கலந்தாய்வு தொடக்கம் 


கோவையில் எம்பிஏ படிப்புக்கான மாணவர் சேர்க்கை (பொதுப்பிரிவு) கலந்தாய்வு நேற்று தொடங்கியது.2019-2020 கல்வி ஆண்டில், பல்கலைக்கழகங்கள், பொறி யியல் கல்லூரிகள், கலை அறிவியல் கல்லூரிகள் மற்றும் மேலாண்மை கல்லூரிகளில், எம்பிஏ படிப்புக்கான அரசு ஒதுக் கீட்டு இடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு, கோவை அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்று வருகிறது. 
நேற்று முன்தினம் சிறப்பு பிரிவினருக்கு கலந்தாய்வு நடைபெற்றது.பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு நேற்று தொடங்கியது. 

தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பிடித்த பொள்ளாச்சி மாணவி எஸ்.ஸ்வரூபா, கோவை பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரியையும், 2-ம் இடம் பிடித்த சென்னை மாணவி ஏ.கார்த்திபிரியா, சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தையும், 3-வது இடம் பிடித்த சென்னை மாணவர் பி.பிரசன்னாகுமார், பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரியையும் தேர்வு செய்தனர்.இவர்களுக்கு, தமிழ்நாடு எம்பிஏ, எம்சிஏ, மாணவர் சேர்க்கை செயலர் பி.தாமரை சேர்க்கை ஆணைகளை வழங்கினார். அப்போது, கல்லூரி கல்வி இயக்கக கோவை மண்டல இணை இயக்குநர் பி.பொன் முத்துராமலிங்கம், ஒருங்கிணைப் பாளர் பி.கே.பழனி ஆகியோர் உடனிருந்தனர்.பின்னர் பி.தாமரை கூறியது:கடந்த 17-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை நடைபெற்ற எம்சிஏகலந்தாய்வுக்கு 1,533 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதில் 1,213 பேர் கலந்துகொண்டதில், 1,196 பேர் கல்லூரிகளில் சேர்ந்தனர். 320 பேர் பங்கேற்கவில்லை. 17 பேர் விரும்பிய கல்லூரிகள் கிடைக்காமல் கலந்தாய்வில் பங்கேற்கவில்லை என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி