NET,NEET,JEE Examination 2020 - Notification Published - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 23, 2019

NET,NEET,JEE Examination 2020 - Notification Published


தேசிய தேர்வு முகமையின் தேர்வுகால அட்டவணை வெளியீடு  நீட் தேர்வு அடுத்த ஆண்டு மே 3-ல் நடைபெறும் டிசம்பர் 2 முதல் 31-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்உயர்கல்வி படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வு கால அட்டவ ணையை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு மே 3-ம் தேதி நடைபெற உள்ளது.நம் நாட்டில் உயர்கல்வி நிறு வனங்களில் சேருவதற்கான அனைத்து நுழைவுத் தேர்வுகளை யும் நடத்த தேசிய தேர்வு முகமை (என்டிஏ) 2017-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இதன்மூலம் நீட், ஜேஇஇ உள்ளிட்ட தகுதித் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின் றன.

இந்நிலையில் 2020 ஜூன் வரை ஓராண்டுக்கான தேர்வுகால அட்டவணையை என்டிஏ நேற்று வெளியிட்டது.

இதுதொடர்பான செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:நீட் நுழைவுத்தேர்வு அடுத்த ஆண்டு மே 3-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு டிசம்பர் 2-ல்தொடங்கி 31-ம் தேதி முடி வடையும். ஹால்டிக்கெட்கள் மார்ச் 27-ல் வெளியிடப்படும். தேர்வு முடிவுகள் ஜூன் 4-ல் வெளியாகும்,

ஜேஇஇ முதன்மை தேர்வு

ஐஐடி உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களில் சேருவதற்கான ஜேஇஇ முதன்மை தேர்வு ஆண்டுக்கு இருமுறை நடத்தப் படும். அதன்படி முதல்கட்டத் தேர்வுகள் ஜனவரி 6 முதல் 11-ம் தேதி வரை நடைபெறும். மாணவர்கள் செப்டம்பர் 2-ல் தொடங்கி30-ம் தேதிக்குள் விண் ணப்பிக்க வேண்டும். ஹால்டிக் கெட்கள் டிசம்பர் 6-ம் தேதியும், தேர்வு முடிவுகள் ஜனவரி 31-ம் தேதி வெளியிடப்படும். 2-ம் கட்ட தேர்வுகள் ஏப்ரல் 3-ல் தொடங்கி 9-ம் தேதி முடிவடையும். மாணவர் கள்பிப். 7 முதல் மார்ச் 7-வரை விண்ணப்பிக்கலாம். தேர்வு முடிவு ஏப்ரல் 30-ல் அறிவிக்கப்படும்.

யுஜிசி நெட் தேர்வு

இதுதவிர உதவி பேராசிரியர் தகுதிக்கான யுஜிசி நெட் தேர்வு டிசம்பர் 2-ல் தொடங்கி 6-ம் தேதி வரையும், இளநிலை ஆராய்ச்சி படிப்பு உதவித் தொகைக்கான நெட் தேர்வு டிசம்பர் 15-ம் தேதியும் நடைபெறும். இந்த தேர்வுக்கு இணையதளம் வழியாக செப்டம்பர் 9 முதல் அக்டோபர் 9-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். ஹால்டிக்கெட் நவம்பர் 9-ம் தேதி வெளியிடப்படும். தேர்வு முடிவுகள் டிசம்பர் 31-ல் வெளியாகும். நீட் தவிர இதர தேர்வுகள் கணினி வழியாக நடத்தப்படும். கூடுதல் தகவல்களை www.nta.ac.in இணையத்தில் அறியலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி