பாடநூலில் பிழை: ஆசிரியர்தான் பொறுப்பு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 7, 2019

பாடநூலில் பிழை: ஆசிரியர்தான் பொறுப்பு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்


பாடப் புத்தகத்தில் வெளிவந்தபிழைக்கு சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள்தான் பொறுப்பேற்க வேண்டும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:கோபிசெட்டிபாளையம் பகுதியில் சாலை விரிவாக்கப் பணிகள், சுற்றுலாப் பயணிகளுக்காக படகு இல்லம், பூங்கா ஆகியவை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 7 இடங்களில் துணை மின் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. மேலும் 2 துணை மின் நிலையங்கள் திறக்கப்படவுள்ளன. கொடிவேரி அணை சுற்றுலாத் தலத்தை மேம்படுத்தி குற்றாலத்தைப் போல் கொடிவேரியை உருவாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.இதுவரை 45.72 லட்சம் மடிக்கனிணிகள் வழங்கப்பட்டுள்ளன. விரைவில் கல்வி சேனல் தொடங்கப்படவுள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் ஆங்கில வழிக் கல்வி பயிலும் மாணவர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை. கட்டணம் செலுத்தியவர்களுக்கு திருப்பி அளிக்கப்படும்.

தொடக்கப் பள்ளிகளில்2 மாத காலத்தில் பயோமெட்ரிக் முறை கொண்டு வரப்படும். பாடப் புத்தகத்தில் வெளிவந்த பிழைக்கு சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள்தான் பொறுப்பேற்க வேண்டும். இதில் அதிகாரிகள் மீது எப்படி குறை சொல்ல முடியும்? இதற்காக குழு அமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும். புதிய கல்விக் கொள்கையை பொருத்தவரை தமிழகத்தில் இரு மொழிக் கொள்கைதான் தொடர வேண்டும் என பிரதமருக்கு தமிழக முதல்வர் கடிதம் எழுதியுள்ளார். தமிழகத்தில் இரு மொழிக் கொள்கைதான் தொடரும் என்றார்.

2 comments:

  1. KSJ academy, Namakkal offers ONLINE Test for PG TRB ENGLISH. Totally 16 Tests comprising 2200 questions on par with TRB standard.

    The interested Aspirants may contact this number 9865315131 for further details.

    ReplyDelete
  2. பாடநூலில் உள்ள பிழைகளுக்கு சம்மந்தப்பட்ட அமைச்சர்தான் பொறுப்பேற்க வேண்டும். ஆசிரிWர் தான் பொறுப்பேற்க வேண்டும் எனில் அமைச்சர் மயிறு புடுங்கவா இருக்கீங்க? ரிசைன் பன்னிட்டு போடா வென்று . சம்மந்தப்பட்ட வாத்தியான் பாத்துக்குவான்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி