என் கல்விக்கு வந்த சோதனை... - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 19, 2019

என் கல்விக்கு வந்த சோதனை...



என்னடா...  என் கல்விக்கு வந்த சோதனை...

வட்டார வள மையத்தை இணைத்தால் அரசு பள்ளியில் கல்வி தரம் உயரும்...
பள்ளிகளை இணைத்தால் அரசு பள்ளியில் கல்வி தரம் உயரும்....
அதிக அளவில் பதிவேடுகள் பராமரித்தால்
அரசு பள்ளியில் கல்வித்தரம் உயரும்....
ஆங்கில வழிக்கல்வி முறையை அறிமுகம்
செய்தால் அரசு பள்ளியில் கல்வித்தரம் உயரும்...
பள்ளிகளை மூடி நூலகம் திறந்தால் அரசு பள்ளியில் கல்வித்தரம் உயரும்....
இணையதளத்தில் அமர்ந்து கொண்டு எந்நேரமும் தகவல்களை பதிவேற்றம் செய்து கொண்டிருந்தால் அரசு பள்ளியில் கல்வித்தரம்
உயரும்...
அருகாமையில் உள்ள தனியார் பள்ளியில் 25 சதவீதம் இடஒதுக்கீடு கொடுத்தால் அரசு பள்ளியில் கல்வித்தரம் உயரும்.....
ஆசிரியர்கள் கைரேகை வருகை பதிவு மேற்கொண்டால்
அரசு பள்ளியில் கல்வித்தரம் உயரும்....
எப்போது அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் சூழ்நிலையினை கருத்தில் கொள்ள
போகிறார்கள்?  ஆசிரியர்களை பழிவாங்குவதாய் நினைத்துக் கொண்டு மாணவர்களின் எதிர்காலத்தோடு விளையாடுவதை
எப்போது உணர போகிறார்கள்?
பிற வேலைகளை தவிர்த்து
மாணவர்களுக்கு பாடம் மட்டும் நடத்த ஆசிரியர்களுக்கு எப்போது சுதந்திரம் தர போகிறார்கள்?
இன்றைய அதிகாரிகள் அனைவரும் அன்றைய அரசு பள்ளி மாணவர்கள்தானே!
அன்று
மாணவனை மகுடமாக்கும் அதிகாரம்
ஆசிரியரிடம் இருந்தது...
இன்று மாணவனின் எதிர் காலத்தை மழுங்கடிக்கும் அதிகாரம் அரசாங்கத்திடம்.... எப்படி கல்வித்தரம் உயரும்...  வெறும் கட்டிடங்களில் அல்ல கல்வித்தரம்...  கல்வியை மூலதனமாக எண்ணாமல்
செலவீனமாக எண்ணும் அரசாங்கம் இருக்கும் இடத்தில் கல்வி 
தரமானதாக அல்ல.... கட்டாந்தரையாகக்
கூட இருக்க வாய்ப்பு இல்லை....🔥🔥🔥  -     - ஆசான்

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி