தமிழகத்தில் 377 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது அமைச்சர் செங்கோட்டையன் நாளை வழங்குகிறார் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 4, 2019

தமிழகத்தில் 377 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது அமைச்சர் செங்கோட்டையன் நாளை வழங்குகிறார்


பள்ளிக் கல்வித் துறை சார்பில் சென்னையில் நாளை நடக்க உள்ள ஆசிரியர் தின விழாவில் 377 நல்லாசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கப் படுகிறது.

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் சர்வபள்ளி எஸ்.ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்.5-ம் தேதி ஆண்டு தோறும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, தமிழக அளவில் சிறந்த ஆசிரியர்களை தேர்வு செய்து ‘டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது’ வழங்கி தமிழக அரசு கவுரவித்து வருகிறது.

அதன்படி இந்த ஆண் டுக்கான நல்லாசிரியர் விருதுக்கு 377 பேர் தேர்வாகி உள்ளனர்.பள்ளிக் கல்வித் துறை சார்பில் ஆசிரியர் தின விழா சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நாளை (செப்.5) நடைபெற உள்ளது. இந்த விழாவில்அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் 165 ஆசி ரியர்கள், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 165, தனியார் பள்ளி களில் 32, ஆங்கிலோ இந்தியன் பள்ளிகளில் 2, மாற்றுத்திறன் ஆசி ரியர்கள் 3, மாநில கல்வியியல் ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனத்தில் 10 பேராசிரியர்கள் என377 பேருக்கு விருது வழங்கப்பட உள்ளது.

விருதுகளை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங் கோட்டையன் வழங்குகிறார்.டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது ரூ.10 ஆயிரம் ரொக்கம், 36.5 கிராம் எடையுள்ள வெள்ளிப் பதக்கம், பாராட்டுச் சான்றிதழ் ஆகியவற் றைக் கொண்டதாகும். இந்த விழா வில் பள்ளிக் கல்வி முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ், இயக்கு நர் எஸ்.கண்ணப்பன் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.

இதற்கிடையே, விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள ஆசிரியர் கள் மீது புகார், குற்றவியல் நட வடிக்கை ஏதும்நிலுவையில் இல்லை என்பதை உறுதிசெய்து, விருது பெறுவதற்கான அழைப்புக் கடிதத்தை வழங்க வேண்டும் என முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக் கல்வி இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

2 comments:

  1. கல்வி சுற்றுப்பயணம் முடிந்து வந்ததுள்ள கல்வி அமைச்சர் சிறப்பாசிரியர்களின் கவலையை தீர்க்க நடவடிக்கை மேற்கொள்வாரா?

    ReplyDelete
  2. ஆவடியில் உள்ள பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு போன வருடம் இந்த வருடம் நல்லாசிரியர் விருது கிடைப்பது மர்ம்ம் என்ன.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி