அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் சொத்து விவரங்களை இணையத்தில் பதிவேற்ற உத்தரவு - kalviseithi

Sep 4, 2019

அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் சொத்து விவரங்களை இணையத்தில் பதிவேற்ற உத்தரவு


நீதிமன்ற உத்தரவின்படி அரசு, அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் சொத்து விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் ச.கண்ணப்பன், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கை: தமிழகத்தில் 7,728 அரசு, அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் ஆசிரியர்கள், பணியாளர்களுக்கு பயோமெட்ரிக் வருகைப்பதிவு முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.

தொடர்ந்து தொடக்க, நடுநிலைப் பள்ளிகளுக்கும், பயோமெட்ரிக் வருகைப்பதிவு முறை நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இதற்கு தடை கேட்டு தொடரப்பட்ட வழக்கில் உயர் நீதிமன்றம் சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.அதன்படி அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயோமெட்ரிக்வருகைப்பதிவு முறையை அமல்படுத்த தடை எதுவும் இல்லை. எனவே, அதற்கான பணிகளை துரிதப்படுத்த வேண்டும்.

இதையடுத்து ஆசிரியர்கள், பணியாளர்களின் அசையும் மற்றும் அசையா சொத்து விவரங்களை பதிவேட்டில் தவறாமல் பதிவு செய்து பராமரிக்கவும், அவற்றை எமிஸ் இணையத்தில் பதிவேற்றவும் முதன்மைக் கல்வி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஊழல் மற்றும் கண்காணிப்புத் துறையின் அறிவுறுத்தல்படி சொத்து விவரங்களில் தவறு செய்துள்ள ஆசிரியர்கள், பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், ஆசிரியர்களின் பதவி உயர்வு செயல்முறை முழுவதும் தகுதி மற்றும் பணிமூப்பு அடிப்படையில் நடக்கவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி