கல்வித் தொலைக்காட்சிக்கு கட்டணம் வசூலிக்க பள்ளிக் கல்வித்துறை திட்டம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 11, 2019

கல்வித் தொலைக்காட்சிக்கு கட்டணம் வசூலிக்க பள்ளிக் கல்வித்துறை திட்டம்


தமிழக அரசின் இலவச கல்வி தொலைக்காட்சி சேனலுக்குஇனி கட்டணம் வசூலிக்க பள்ளிக் கல்வித் துறை திட்டமிட்டுள்ளது.

தமிழகத்தில் மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்துவதற்காக பள்ளிக் கல்வித் துறை சார்பில் புதிய கல்வி தொலைக்காட்சி சேனல் கடந்த ஆகஸ்ட் 26ஆம் தேதி தொடங்கப்பட்டது. இந்த சேனல் அரசு கேபிளில் 200ஆவது அலைவரிசையில் இலவசமாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.இந்த நிலையில், கல்வி தொலைக்காட்சி சேனலுக்கு இனி கட்டணம் வசூலிக்க கல்வித்துறை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து பள்ளிக்கல்வி அதிகாரிகள் கூறுகையில், கல்வி தொலைக்காட்சித் திட்டத்தை தொடர்ந்து சிறப்பாக செயல்படுத்த கூடுதல் நிதி தேவைப்படுகிறது. எனவே, இலவசமாக வழங்கப்படும் இந்தச்சேனலை கட்டண சேனலாக மாற்ற திட்டமிட்டுள்ளோம். விரைவில் அரசு கேபிளில் மிகக் குறைந்த கட்டணமுள்ள சேனல்கள் பட்டியலில் கல்வி தொலைக்காட்சியும் இனி இடம் பெறும்.

மாணவர்களுக்கு பயனுள்ள பல்வேறு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பு செய்யப்படுவதால் மக்கள் தொடர்ந்து ஆதரவு தர வேண்டும். கட்டண வசூல் மூலம் கிடைக்கும்தொகை சேனல் வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படும் என்றனர்.

3 comments:

  1. உங்கள் நிகழ்ச்சி ஒன்றிரண்டு பார்த்தேன்...

    ஆசிரியர்கள் நடத்துவது... ஏதோ... script மனப்பாடம் செய்து ஒப்பிப்பது போல உள்ளது...

    இப்படி இருந்தால் கல்வித் தொலைக்காட்சி.. விரைவில் மூடப்பட்டுவிடும்..

    ReplyDelete
    Replies
    1. உண்மை தான். முடிந்தால் கல்வி தொலைக்காட்சி எப்படி செயல்பட வேண்டும் என்பதை குஜராத் மாநில அரசை பார்த்து தெரிந்துக்கொள்ளட்டும்

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி