ஒரே தலைமையாசிரியர் கண்காணிப்பதால் கல்வித்தரம் உயரும்: அமைச்சர் செங்கோட்டையன் - kalviseithi

Sep 27, 2019

ஒரே தலைமையாசிரியர் கண்காணிப்பதால் கல்வித்தரம் உயரும்: அமைச்சர் செங்கோட்டையன்


ஒரே தலைமை ஆசிரியர் கண்காணிப்பதால் கல்வித் தரம்உயரும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப்பேசிய அவர், ''ஒரே வளாகமாக இருக்கும் பள்ளியில், ஒற்றைத் தலைமை ஆசிரியர் கண்காணிப்பதால் கல்வித்தரம் உயரும். அங்கே நடைபெறும் கல்விப் பணிகளைக் கண்காணித்து, அறிவுரை வழங்க, உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முதல்வரின் அனுமதியோடு, ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.பள்ளி வளாகத்தை ஒருங்கிணைக்கவும் ஆய்வு செய்து ஆசிரியர்கள் வராதபோதும் கல்வித் தரத்தை ஆய்வு செய்யவும் தலைமை ஆசிரியர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.இதனை மக்களும் கல்வியாளர்களும் பெற்றோர்களும் வரவேற்றுள்ளனர்.

நீட் தேர்வுக்குப் பயிற்சி அளிப்பது மட்டுமே பள்ளிக் கல்வித்துறையின் நடவடிக்கை. நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களை மேற்படிப்புக்கு அனுப்புவது, மருத்துவத் துறையில் உள்ள மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரின் ஆளுகைக்கு உட்பட்டது. அவர்தான் நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் குறித்துப் பதிலளிக்க முடியும்.பள்ளிக் கல்வித்துறை சார்பில், நீட் நுழைவுத் தேர்வு பயிற்சிக்காக 412 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆசிரியர்களைக் கொண்டு இந்தப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

ராஜஸ்தானில் உள்ள நிறுவனம் மூலம் வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் பயிற்சி அளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது'' என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.ஒரே வளாகத்தில் செயல்படும் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளின் கல்விச் செயல்பாடுகளைக் கண்காணிக்கும் பொறுப்பு, உயர்நிலை மற்றும் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணை அண்மையில் வெளியிடப்பட்டது.

இதுகுறித்து பல்வேறு சர்ச்சைகள் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது

3 comments:

  1. ஓரே அமைச்சரே அனைத்து துறைகளையும் பார்க்கலாமே! எதற்கு தனித்தனி அமைச்சர்கள்.

    ReplyDelete
  2. In History of Tamilnadu Education minister is the "BLACK DOT" Person.Loosu payan

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி