அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு இன்றைய போராட்டத்தில் கலந்துகொள்ளாது - அறிக்கை வெளியீடு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 6, 2019

அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு இன்றைய போராட்டத்தில் கலந்துகொள்ளாது - அறிக்கை வெளியீடு.


அறிக்கை
06.09.2019

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு

இன்று 06.09.2019 முதல் ஜாக்டோ ஜியோ சார்பில் நடத்துகின்ற ஆர்பாட்டங்களில் கலந்து கொள்ளவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்,

ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ இன்று ( 06.09.2019 ) முதல் தொடர் போரட்டங்களை அறிவித்துள்ளது,  இந்த போர்ட்டங்களில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு கலந்து கொள்ளவில்லை காரணம் நாம் நம் எதிர்கால வாழ்வாதார கோரிக்கையான புதிய பங்களிப்பு ஓய்வூதியத்திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிட்டத்தயே நடைமுறை படுத்த வேண்டும் என்று பலக்கட்ட போராட்டங்களை நடத்தியும் அரசு செவிசாய்க்க மறுக்கிறது

இந்த சூழ்நிலையில் நம் நியாமான கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் நடக்கும் போராட்டங்களால் மட்டும் தமிழக அரசு நமது கோரிக்கையை ஏற்று உணர்வை அறிந்து கோரிக்கைகளை நிறைவேற்றுமா என்ற ஐயம் ஏற்படுவதாலும்

இந்த மாதம் அனைத்துவகை பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு நடைபெற இருப்பதாலும் மாணவர்கள் மற்றும் பெற்றோர் நலன் கருதி தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு இந்த போரட்டத்தில் கலந்துக்கொள்ள வில்லை என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்

சா.அருணன்
நிறுவனத் தலைவர்
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு

4 comments:

  1. உண்மையான காரணம் "கண்ணீர் சிந்த வேண்டியிருக்கும்"

    ReplyDelete
  2. ரொம்ப அழகா இருக்கு காரணம்.
    முக்கியமாக தேர்வு மற்றும் தேர்வு விடைத்தாள் திருத்தும் நேரம் தான் போராட்டம் செய்வது வழக்கம்.
    ஒவ்வொருவரும் குறைந்தது 30ஆயிரம் சம்பளம் வாங்கறீங்க. உங்க கோரிக்கை அரசு ஏற்கவில்லை.
    தனியார் பள்ளிகள் வளர முக்கிய காரணம் அரசும், அரசு ஆசிரியர்கள், மற்றும் அரசு நிறுவன ஊழியர்கள் தான்.
    உங்க வருமானம் அப்படி.

    ReplyDelete
  3. பாதியில அத்துட்டு அம்போனு விட்டுட்டு போறதுக்கு இது நல்ல முடிவுதான் ஐயா.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி