வைட்டமின் டி குறைபாட்டை தவிர்க்க மாணவர்கள் வெயிலில் விளையாடுவதை ஆசிரியர்கள் ஊக்குவிக்க வேண்டும் - பள்ளிக் கல்வித் துறை - kalviseithi

Sep 5, 2019

வைட்டமின் டி குறைபாட்டை தவிர்க்க மாணவர்கள் வெயிலில் விளையாடுவதை ஆசிரியர்கள் ஊக்குவிக்க வேண்டும் - பள்ளிக் கல்வித் துறை


ஊட்டச்சத்து குறைபாட்டை தவிர்க்க ஓய்வு நேரத்தில் மாணவர் கள் வெயிலில் விளையாடுவதை ஊக்குவிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தி உள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் ச.கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப் பிய சுற்றறிக்கையில் கூறியிருப் பதாவது:இன்றைய நவீன உலகில் மாணவர்களிடையே விளையாட்டு மீதான ஆர்வம் குறைந்து வருவ துடன், செல்போன், கணினி உள் ளிட்ட சாதனங்களிலேயே அதிக கவனம் செலுத்துகின்றனர்.

இதனால் பள்ளி மாணவர்களுக்கு ‘வைட்டமின் டி’ உட்பட ஊட்டச் சத்து குறைபாடு ஏற்படுவதாக மருத்துவ தகவல்கள் தெரிவிக்கின் றன. இதை கருத்தில்கொண்டு அனைத்துப் பள்ளிகளிலும் பாட வேளையின்போது ஆசிரியர் கள் விளையாட்டின் அவசியம் குறித்து எடுத்துக்கூறி மாணவர் களிடையே விழிப்புணர்வு ஏற் படுத்த வேண்டும்.ஓய்வு நேரத்தில் சூரியஒளி உடலில் படும்படி உடற்பயிற்சிமேற்கொள்ளுதல், விளையாடுதல் உள்ளிட்ட செயல்களை மாணவர் கள் கட்டாயம் மேற்கொள்ள வேண்டும். வழிபாட்டுக் கூட்டத்தை காலை வெயில் நேரத்தில் மைதானத்தில் நடத்துவதுடன், இடைவேளையில் மாணவர்களை மைதானத்தில் உலவ அனு மதிக்க வேண்டும். இதுதவிர விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில் மாணவர்களுக்கு அவ் வப்போது போட்டிகள் நடத்த வேண்டும்.

மேலும், அனைத்து வகையான பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கும் வைட்டமின்-டி குறைபாடு ஏற்படாமல் தடுக்க மாவட்ட முதன்மைக்கல்வி அதி காரிகள் உரிய அறிவுரைகளை வழங்கி கண்காணித்து தேவை யான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி