Flash News : பதினொன்று, பன்னிரண்டாம் வகுப்பில் 500 மதிப்பெண்கள் திட்டம் அறிமுகம் - தமிழக அரசு அரசாணை வெளியீடு. - kalviseithi

Sep 19, 2019

Flash News : பதினொன்று, பன்னிரண்டாம் வகுப்பில் 500 மதிப்பெண்கள் திட்டம் அறிமுகம் - தமிழக அரசு அரசாணை வெளியீடு.


11,12th std 500 Mark New Allotment GO - Download here

பதினொன்று, பன்னிரண்டாம் வகுப்பில் 500 மதிப்பெண்கள் திட்டம் அறிமுகம்.

ஆறு பாடங்கள் 5 பாடங்கள் ஆக குறைப்பு

அரசாணை வெளியிட்டது, தமிழக அரசு..

புதிய அரசாணையின்படி 6 பாடங்கள், 5 பாடங்களாக குறைக்கப்பட உள்ளன. பதினோராம் வகுப்பு பாடத்திட்டத்தில் தற்போது ஒவ்வொரு பிரிவிலும் 6 பாடங்கள் இடம் பெறுகின்றன. மருத்துவம் மற்றும் பொறியியல் இரண்டுக்கும் சேர்த்து படிக்கக்கூடிய வகையில் பாடப்பிரிவுகள் தற்போது இருக்கின்றன. அதாவது, தமிழ், ஆங்கிலம், இயற்பியல், வேதியியல், உயிரியல், கணிதம்என ஆறு பாடங்கள் இருக்கின்றன.இந்த பிரிவை தேர்வு செய்யும் மாணவர்கள் பொறியியல் மற்றும் மருத்துவம் என இரண்டு துறைகளுக்கும் செல்ல முடியும். தற்போது, இந்த பிரிவிலிருந்து கணிதப்பாடம் நீக்கப்பட இருக்கிறது. அதன்படி மருத்துவ படிப்பிற்கு மட்டும் செல்லக்கூடிய மாணவர்கள் இந்த பிரிவை தேர்வு செய்து கொள்ளலாம்.அதே போல் பொறியியல் துறை சார்ந்த படிப்புகளுக்கு செல்லக்கூடிய மாணவர்களுக்கு, தமிழ் , ஆங்கிலம், இயற்பியல், வேதியியல், கணிதம் என ஐந்து பாடங்கள் மட்டும் இருக்கும். வணிகவியல் பிரிவை தேர்வு செய்யக்கூடிய மாணவர்களுக்கு, தமிழ், ஆங்கிலம் வணிகவியல், பொருளியல், கணக்குப்பதிவியல் என ஐந்து படங்கள் மட்டும் இருக்கும். கணக்குப்பதிவியல் பிரிவாக இருந்தால் , தமிழ், ஆங்கிலம், வணிகவியல், கணக்குப் பதிவியல் தணிக்கையியல் கணினி தொழில்நுட்பம் என ஆறு பாடங்கள் இருக்கின்றன.இதில், கணினி தொழில்நுட்பம் பாடம் நீக்கப்பட்டு 5 பாடங்கள் மட்டும் இடம்பெற உள்ளன. இப்படி ஒவ்வொரு பிரிவிலும் இருக்கக்கூடிய 6 பாடங்கள் 5 பாடங்களாக குறைக்கப்பட்டு, தலா 100 மதிப்பெண்கள் என, 500 மதிப்பெண்களாக குறைக்கப்படுகிறது. நடப்பு கல்வியாண்டிற்கு இந்த மாற்றம் அமலுக்கு வராது என்றும், 2020 - 21 கல்வி ஆண்டு முதல் அமலுக்கு வரும் .

( இது குறித்த செய்தி காலையில் நமது கல்விச்செய்தி வலைதளத்தில் வெளியிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. )

10 comments:

 1. என்ன பாவம் செய்தார்கள் இந்த மாணவர்கள். ஆசிரியர்கள் பணியிடங்களை குறைப்பதற்கும் பழிவாங்குவதற்கும் போடப்பட்ட அரசாணை.

  ReplyDelete
 2. அப்போ teacher ஆக tet pass ஆகணும்.for that ,all subjects v should know...so அதுக்கு என்ன படிக்கணும்?என்னனென்ன subjects வைப்பாங்க அந்த group ல????

  ReplyDelete
 3. dai peasama verum oru subject ku 10 marku nu soli 60 marks totalnu vainga.. thakuthiyea ilathavan aatchila iruntha intha kodumaithan.. naadu velangumda..

  ReplyDelete
 4. தாய் மொழிக் கல்வியை ஊக்குவிப்பது தங்களது நோக்கமாக இருக்கும் போது தமிழ் முதல் மற்றும் இரண்டாவது தாள் என்ற நிலையில் தானே தாய்மொழியாகிய தமிழ் மொழியில் உள்ள பல்வேறு கூறுகளையும் தெளிவாக படித்து தெரிந்து கொள்ள முடியும்.
  இந்த செயல் மொழியைபற்றிய அறிவைப் பெறுதலில் சுருங்கி கற்க வைக்கும் அல்லவா??????
  முதலில் எதற்காக இந்த நடைமுறை...
  ஏற்கனவே இருந்த நடைமுறை மாணவர்களுக்கு பாரமாக இருந்ததாக யார் கூறுவது ..
  அப்போது தங்களது நோக்கம் என்ன மத்திய அரசு கொண்டு வர இருக்கும் புதிய கல்விக்கொள்கைக்குத் தேவையான அடித்தளங்களை தற்போது இருந்தே அமைத்துக் கொடுத்து தெளிவாக தேசிபாதையை அமைப்பதற்கு ஏதுவாக முன் ஏற்பாடுகளைச் செய்து தருவது அவ்வளவு தான்..

  ReplyDelete
 5. எல்லாம் நன்மைக்கே

  ReplyDelete
 6. Teacher yarum inimal padikenga epdi yum valai ila

  ReplyDelete
 7. Unknown sir 7/3)19 non minority schools appointment post approval ஆகுமா... 7/03/19 date appointment

  ReplyDelete
 8. Nice scheme. Because nowadays syllabus for higher secondary 11 and 12th are heavy. So if a student wants to write JEE MAIN OR JEE ADV. He will get more practice in only physics,chemistry,and maths. So no use of a nother subject ie.donot waste study of computer or biology. It only waste time.so nice scheme for IIT ASPIRANRS AND NEET ASPIRANTS.as students point of view they are very happy and free from over stress.

  ReplyDelete
 9. Cs romba mukkiyama thevai for higher studies.. Don't remove
  Include c. App in commerce group..

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி