School Morning Prayer Activities - 19.09.2019 - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 19, 2019

School Morning Prayer Activities - 19.09.2019


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 19.09.19

திருக்குறள்


அதிகாரம்:கள்ளாமை

திருக்குறள்:283

களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து
ஆவது போலக் கெடும்.

விளக்கம்:

கொள்ளையடித்துப் பொருள் குவிப்பது, முதலில் பெரிதாகத் தோன்றினாலும், அந்தச் செயல் ஏற்கனவே இருந்த செல்வத்தையும் அடித்து கொண்டு போய்விடும்.

பழமொழி

Hearty laugh  dispels disease.

 வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகும்.

இரண்டொழுக்க பண்புகள்

1. அன்பே கடவுள் எனவே அனைவரிடமும் அன்பாக இருப்பேன்.

2. தாழ்மை என்னை மேலே உயர்த்தும் எனவே பெரியோர், பெற்றோர் மற்றும் ஆசிரியரிடம் தாழ்மையுடன் இருப்பேன்

பொன்மொழி

பணம் மனதையும் பண்பையும் கறைப்படுத்தலாம். பணம் தேவைக்கு மேல் வேண்டாம.  சிறுதுளை வழியாக நீர் கசிந்து அணை உடைவது போல் பணம் என்ற சிறு பொருள் நம் வாழ்வை அழித்துவிடும் ...

---- அன்னை சாரதா தேவி

பொது அறிவு

1. இந்தியாவில் அதிக அளவில் நீர் பாசனத்திற்கு பயன்படுத்தப்படும் நதி எது?

கங்கை நதி.

2. கங்கை நதி உருவாகும் இடம் எது?

இமயமலையில் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள கங்கோத்ரி.

3. கங்கை நதி பாயும் மொத்த தூரம் எவ்வளவு?
2525 கி.மீ

English words & meanings

Spine - backbone of axial skeleton
1.அச்சு சட்டகத்தில் உள்ள முதுகெலும்பு.
2. இவ்வெலும்பு தொகுதியானது முதுகுத் தண்டு வடத்தையும் நரம்புகளின் தொகுதியையும் பாதுகாக்கும்.

Strange - unusual or surprising
அந்நியமான விசித்திரமான

ஆரோக்ய வாழ்வு

ஆஸ்துமா தொந்தரவால் மூச்சுவிட முடியாமல் அவதிப்படுகிறவர்கள் பெருங்காயப் பொடியை அனலில் போட்டு அந்தப் புகையை சுவாசித்தால் மூச்சுத் திணறல் தீரும் .

Some important  abbreviations for students

* PK = Pakistan   

* PL = Poland

நீதிக்கதை

முயற்சி செய்வோம்

ராஜாவும், மணியும் நண்பர்கள். அவர்கள் இருவருக்கும், தாய், தந்தையர் மற்றும் சுற்றார் கிடையாது. ராஜாவுக்குக் கண் தெரியாது. அதேபோல் மணியால் நடக்க முடியாது. அவர்கள் வாழ்ந்த கிராமத்தில் கிடைத்த வேலையைச் செய்து, கிராமத்தில் உள்ளோர் கொடுப்பதைச் சாப்பிட்டு வாழ்ந்து வந்தனர். ஒரு நாள் அவர்களுக்குப் பக்கத்து ஊரில் நடக்கும் திருவிழா பற்றித் தெரிய வந்தது. இருவருக்கும் அங்கே போக மிகுந்த ஆசை. அந்த ஊருக்குச் செல்ல மிகுந்த தொலைவு நடக்க வேண்டும். என்னாலோ நடக்க முடியாது, உன்னாலோ பார்க்க முடியாது. நமக்கு ஏன் இந்த ஆசை? என்று மணி வருத்ததுடன் சொன்னான்.

ராஜா சிறிது நேரம் தீவிரமாக யோசித்தான். பின் நண்பா! உன்னால் நடக்கத்தான் முடியாது. ஆனால் கூர்மையாகப் பார்க்க முடியும். என்னால் பார்க்கத்தான் முடியாது. ஆனால் வெகுதூரம் நடக்க முடியும். நீ என் தோள் மேல் ஏறிக்கொள். எனக்கு வழியைச் சொல்லிக்கொண்டே வா. நாம் இருவரும் திருவிழாவிற்குச் சென்று வரலாம் என்றான் ராஜா. இருவரும் மகிழ்ச்சியாக திருவிழாவிற்குச் சென்று வந்தார்கள்.

நீதி :
முயன்றால் முடியாதது எதுவுமில்லை.

இன்றைய செய்திகள்

18.09.2019

* தொலைபேசியில் தொடர்பு கொண்டால் வீட்டுக்கே இயற்கை உரம் தேடி வரும் என்று சென்னை மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

* செப்டிக் டேங்க் பிரச்சினைகளுக்கு தீர்வு சொல்லும் வகையில் கோவையை சேர்ந்த மேக் இந்தியா நிறுவனத்தை சேர்ந்த மாணிக்கம் என்பவர் பயோ டைஜஸ்டர் என்ற நவீன டேங்கை வடிவமைத்துள்ளார். இது நவீனமானதுடன், சுகாதாரமானதும், நீர் மறுசுழற்சிக்கும் உதவுவதாகவும் உள்ளது.

* வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் 11 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

* உலக சாம்பியன்ஷிப் மல்யுத்தம் போட்டியில் ரீபேக்கேஜ் சுற்றில் இரண்டு வெற்றிகள் பெற்று ஒலிம்பிக் வாய்ப்பை உறுதி செய்துள்ளார் வினேஷ் போகத்.




* சீன ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து முதல் சுற்றில் எளிதாக வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

Today's Headlines

🌸 Chennai Corporation Commissioner Prakash said that if you contact him over  phone,  the manure will come to your home by itself

 🌸*Bio Digester*, a modern tank is designed by Manickam from  Make India, Coimbatore, to solve septic tank problems.  It is modern, hygienic and helps with water recycling.

 🌸The Chennai Meteorological Department has warned that  a  depression may form in the Bay of Bengal, so there may be  heavy rainfall in 11 districts of Tamil Nadu in next 24 hours.

 🌸 Vinesh Bogath has confirmed his Olympic opportunity with two victories in the World Championship Wrestling Re package round.

 🌸 P V Sindhu easily won the first round of the Chinese Open badminton competition and there by advanced to the next round.

Prepared by
Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி