பிளஸ் 2 முடித்த மாணவர்களின் விவரங்களை சேகரிக்க பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல் - kalviseithi

Oct 4, 2019

பிளஸ் 2 முடித்த மாணவர்களின் விவரங்களை சேகரிக்க பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்


கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் பிளஸ் 2 முடித்த மாணவ, மாணவியர் குறித்த விவரங் களைச் சேகரிக்குமாறு, பள்ளிக் கல் வித் துறை சார்பில் அனைத்துப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவு றுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த 2017-18,2018-19 ஆம் ஆண்டுகளில் பிளஸ் 2 முடித்த மாணவ, மாணவியர்கள் தற்போது உயர் கல்வி பயில்கிறார்களா, அவ் வாறு உயர் கல்வி பயின்றால், அவர் கள் எந்த ஊரில், எந்த கல்வி மையத் தில், எந்த பாடப்பிரிவில் பயின்று வரு கிறார்கள் என்ற விவரங்களைச்சேக ரித்து, அதை சம்பந்தப்பட்ட மாணவ ரின் ஏ.ஜ.எம்.எஸ். எண்ணில் கணினி யில் பதிவேற்றுமாறு, மாவட்ட முதன் மைக் கல்வி அதிகாரிகள் மூலம் கல் வித் துறை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்துராமநாதபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பி. அய்ய ணனிடம் கேட்டபோது, அவர் கூறி யது: ராமநாதபுரம் மாவட்டத்தில் பிளஸ் 2 முடித்த மாணவர்கள் விவ ரம் சேகரிக்கப்பட்டு வருகிறது.தமிழக அரசு சார்பில் ராமநாதபுரம் மாவட் டத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள் ளிகளுக்கு 20 கணினிகளும், உயர்நி லைப் பள்ளிகளுக்கு 10 கணினிகளும் வழங்கப்பட்டுவருகின்றன. அதனடிப்படையில், மாவட்டத்தில் 134 மேல்நிலைப்பள்ளிகள், 69 உயர்நி லைப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர் பயனடைய உள்ளனர். மாவட்டத்தில் உள்ள அனைத்து அர சுப் பள்ளிகளிலும் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்த அறிவுறுத்தப் பட்டுள்ளது. மேலும், 12 நடுநிலைப் பள்ளிகளில் ஆசிரியர்கள், ஊழியர் கள்வருகைப்பதிவைமின்னணுமுறை யில் பதிந்து, அதை உறுதிப்படுத்தவும் தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவி டப்பட்டுள்ளது.

மழைக் காலம் என்பதால், பள்ளிக ளில் உள்ளபழைய கட்டடங்களின் உறுதித் தன்மையை ஆய்வு செய்து, இடிக்கவேண்டிய கட்டடங்கள் இருந் தால், அதை பொதுப்பணித் துறை உத வியுடன் இடிக்கவும், அதுபோன்ற கட்டடங்ளுக்கு அருகே மாணவர்கள் செல்லாதவகையில் பாதுகாப்பு ஏற்பா டுகள் மேற்கொள்ளவும் உத்தரவிடப் பட்டுள்ளது.

பள்ளிகளில் உள்ள தண்ணீர் தொட்டிகளை சுத்தப்படுத்தவும்,பள் ளிக்கு தொடர்ச்சியாக வராத மாண வர்களின் வீடுகளுக்கு ஆசிரியர்கள் சென்று காய்ச்சல் பாதிப்பு உள்ளதா என்பதை விசாரித்து மருத்துவ உத விகள் வழங்கவும்அறிவுறுத்தப்பட் டுள்ளது. பள்ளி வளாகத்தில் மழை நீர் தேங்காத வகையில் சுகாதாரத்தை பேணவும், தலைமை ஆசிரியர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி