முப்பருவ தேர்வு முறை: அதிகாரிகளுடன் ஆலோசித்து முடிவு! - kalviseithi

Oct 4, 2019

முப்பருவ தேர்வு முறை: அதிகாரிகளுடன் ஆலோசித்து முடிவு!


பள்ளிகளில் தற்போது பின்பற்றப்படும் முப்பருவ தேர்வு முறை ரத்து செய்யப்படுமா என்பது குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட் டையன்விளக்கமளித்துள்ளார்.

இதுகுறித்து அவர், சென்னை ஆழ்வார்ப்பேட் டையில் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம்கூறி யதாவது:ஒட்டுமொத்த இந்தியாவே வியக்கும் வகை யில் தமிழகபள்ளிக் கல்வித்துறையில்பல்வேறு மாற் றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. இதற்கிடையே இலவச கட்டாயக்கல்வி சட்டத்தின்கீழ் 5, 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நிகழ் கல்வியாண்டு முதல் பொதுத்தேர்வு கள் நடத்தப்பட உள்ளன. எனினும், மாணவர்கள் நலன் கருதி முதல் 3 ஆண்டுகளுக்கு மட்டும் அனைவரும் தேர்ச்சி பெறும் வகையில் விதி விலக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. எனவே, 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை அடுத்த 3 ஆண்டுகளுக்கு அனைவரும் தேர்ச்சி செய்யப்படுவார் கள்.

இதுதவிர, பொதுத்தேர்வு எழுதும் 5, 8-ஆம் வகுப்பு மாணவர்க ளுக்கு பள்ளிக்கு அருகே தேர்வு மையங்கள் அமைக்கப்படும். நீண்ட தூரம் செல்ல வேண்டிய அவசியம் ஏற்படாது. மேலும், 5, 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடைமுறையில் தற்போதுள்ள முப்ப ருவ தேர்வுமுறையை ரத்து செய்வது குறித்து கல்வித்துறை அதிகாரி களுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். அரசுப் பள்ளிகளில் 9 முதல் பிளஸ் 2 வரை அனைத்து வகுப்பறைகளும்இந்த மாத இறுதிக் குள் கணினிமயமாக்கப்படும் என்றார் அவர்.

1 comment:

  1. Trisemester method Amma kondu vanthathu
    Adhai neekinal ammavin aanma santhi adaiyadhu
    By Mahalakshmi teacher from Thirupoondi North Nagai

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி