5,8 வகுப்புகளுக்கு முப்பருவ முறை ரத்து - விரைவில் அறிவிக்கிறது பள்ளிக்கல்வித்துறை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 28, 2019

5,8 வகுப்புகளுக்கு முப்பருவ முறை ரத்து - விரைவில் அறிவிக்கிறது பள்ளிக்கல்வித்துறை


5 , 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு வருவதால் புதிய அறிவிப்பு வெளியிட கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.இதன் மூலம் தற்போது நடைமுறையில் உள்ள முப்பருவ கல்வி முறை திட்டமானது 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு ரத்து செய்யப்படும் என்றும் இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

2 comments:

  1. முப்பருவ முறை என்பதே மாணவர்களின் தொடர் வளர்ச்சியினை இறுதி செய்யவே கொண்டுவரப்பட்டது. அதை முதலில் நாம் எதிர்த்த போது, இது தான் பள்ளக்கல்வி எடுக்க வேண்டிய புதிய பரிமாண வளர்ச்சி என்றும் இனி இதுவே கல்வியின் வருங்காலம் என்றும் நமக்கு அறிவுரை வழங்கப்பட்டு இந்த முப்பருவ முறையை அமல்படுத்தி அடிப்படையே தெரியாத மாணவர்கள் 12ஆம் வகுப்புவரை இப்பொது இருக்கிறார்கள்.
    முப்பருவ முறையை ஒழிப்பதென்றால் முழுமைக்கும் ஒழிக்க வேண்டும். அதை விட்டுவிட்டு இது என்ன கேலிக்கூத்து? ஏன் இப்படி மாணவர்களின் கல்வியில் விளையாட வேண்டும்?
    ஒன்றிலிருந்து நான்காம் வகுப்பு வரை முப்பருவம், பின் ஐந்தாம் வகுப்பில் பொதுத் தேர்வு? அருமையான திட்டம்! இவர்களிடமிருந்து பள்ளிக்கல்வியினை மீட்பது எப்படி என்று விழிபிதுங்குகிறது. சங்கங்கள் இதுபோன்ற விஷயங்களுக்கும் குரல் கொடுத்து போராட வேண்டும். ஆசிரியர்கள் ஒன்றினைந்து மாபெரும் கல்வி மீட்பு மற்றும் சுய மரியாதை போராட்டம் நடத்த வேண்டும்!

    ReplyDelete
  2. திட்டம் எல்லாம் நீங்க தண்ணி( சாராயம்) குடித்து விட்டு தான் போதையில் கொண்டு வருகிறீர்களா?
    5,8வகுப்புக்கு எதற்கு பொது தேர்வு.
    தனியார் பள்ளிகளை வளர்த்து விடவா?
    குழந்தைகள் பாவம் அவங்கள கொடுமை செய்ய வேண்டாம்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி