தேர்வு நடத்தாமல் அரசு கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணியிடம் நிரப்ப தடை கோரி வழக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் பதிலளிக்க உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 11, 2019

தேர்வு நடத்தாமல் அரசு கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணியிடம் நிரப்ப தடை கோரி வழக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் பதிலளிக்க உத்தரவு


எழுத்துத் தேர்வு நடத்தாமல் அரசு கல்லூரிகளில் காலியாகஉள்ள உதவிப் பேராசிரியர் பணி யிடங்களை நிரப்ப தடை கோரி தொடரப்பட்ட வழக்கில் ஆசிரியர் தேர்வு வாரியம் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் அரசு கல்லூரி களில் காலியாக உள்ள 2 ஆயி ரத்து 300 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த 4-ம் தேதி அறிவிப்பாணை வெளியிட் டுள்ளது. இந்த அறிவிப்பாணை யில் அனுபவம், தகுதி மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் உதவிப் பேராசிரியர் பணியிடங் கள் நிரப்பப்படும் என தெரி விக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இந்த அறி விப்பை ரத்து செய்யக் கோரி, சென்னையைச் சேர்ந்த சுப்ர மணியன் மற்றும் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த வெங்கடேசன், ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதுதொடர்பாக அவர்கள் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘‘எழுத்து தேர்வு நடத்தாமல் நேர்முகத் தேர்வு அடிப்படையில் உதவிப் பேராசிரியர் பணியிடங் களை நிரப்ப பிறப்பிக்கப்பட்ட அறிவிப்பாணை சட்ட விரோத மானது. இதில் பல்வேறு முறை கேடுகள் நடைபெற வாய்ப்புள் ளது. எனவே ஆசிரியர் தேர்வு வாரியம் பிறப்பித்துள்ள அறிவிப் பாணைக்கு தடை விதித்துஅதை ரத்து செய்ய வேண்டும்’’ என்று கோரியிருந்தனர். இந்த வழக்கு நேற்று நீதிபதி ஆர்.சுப்ரமணியன் முன்பு விசா ரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் வழக்கறிஞர் ஜி.சங்கரன் ஆஜராகி வாதிட்டார்.

அதையடுத்து நீதிபதி, ‘‘இது போன்ற அரசுப் பணியிடங்களை நிரப்ப எழுத்துத்தேர்வு மூலமாகத் தான் தேர்வுகள் நடத்தப்பட வேண்டும். உயர் நீதிமன்றத்தில் உள்ள தோட்டப் பணிகளுக்குக் கூட எழுத்துத்தேர்வு நடத்தப்படுகிறது. எனவே இதுதொடர்பாக உயர் கல்வித் துறை செயலாளர், கல்லூரி கல்வி இயக்குநர் மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் உள்ளிட்டோர் வரும் அக்.15-க் குள் பதிலளிக்க வேண்டும்’’ என உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்துள்ளார்.

55 comments:

  1. TRB POLYTECHNIC CHEMISTRY CLASS COMMENCE ON 13.10.19
    SATURDAY AND SUNDAY ONLY

    ReplyDelete
  2. TRB POLYTECHNIC CHEMISTRY CLASS COMMENCE ON 13.10.19
    SATURDAY AND SUNDAY ONLY

    ReplyDelete
  3. 190 marks written test for Trb asst. Professor Engg. College recruitment.

    ReplyDelete
  4. 180 marks written test for trb asst. Professor for law college recruitment

    ReplyDelete
  5. 190 marks written test for trb polytechnic.

    ReplyDelete
  6. No written test for arts and science college. How???????

    ReplyDelete
  7. exam method is best
    All are get chance

    ReplyDelete
  8. NET, SET போன்ற தகுதித் தேர்வுகள் நடைமுறையில் இருக்கும் போது மேலும் ஒரு தகுதித் தேர்வு தேவையா? NET or SET தேர்ச்சி பெற்றவர்கள் மேலும் ஒரு தகுதித் தேர்வை சந்திப்பது நகைப்பிற்குரியது.

    ReplyDelete
    Replies
    1. Most of the PhD candidates are not NET/SET qualified.

      Delete
    2. tet thervil pass pannavagaluku meendum oru thaguthi thervu thevaya...."why blood... same blood.."

      Delete
  9. NET or SET போன்ற தகுதித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்கழுக்கு பணி நியமனங்கள் வழங்கப்படாத நிலையில் மேலும் ஒரு தகுதித் தேர்வு அர்த்தமற்றது.

    ReplyDelete
    Replies
    1. Mr.kani TET pass pannavangalukku innoru TRB exam conduct panna porom nu sonnanga appo yen sir ippa ketta da appo kekkala ...

      Delete
    2. Tet pass paninavangaluku meendum exam vaichuthan job nu sollirukanga apo net set pass paninalum government jb venum na kandipa exam thevaithan

      Delete
    3. Tet pass paninavangaluku meendum exam vaichuthan job nu sollirukanga apo net set pass paninalum government jb venum na kandipa exam thevaithan

      Delete
    4. அவ்வாறு இல்லையேல் பணம் கொடுப்பவருக்கே வேலை என்றாகிவிடும் சகோ

      Delete
    5. Most of the PhD candidates are not NET/SET qualified

      Delete
  10. NET/SET is just eligibility test. For selection, Exam is only option which gives chance for all. As for now justice is done. lets see what trb and govt have in their mind. Exam is order of the day in India especially in Tamilnadu and why not for Asst professor?

    ReplyDelete
  11. Ph.d holders exempted NET SET exams, then if all are coming for jobs, it is correct method only through written competitive exams.... I think no other way....

    ReplyDelete
  12. NET or SET என்பது தகுதி தேர்வு தான். அப்படியெனில் இந்த தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு மட்டும் இன்னொரு தேர்வு நடத்தி வேலை வழங்கட்டும். இல்லையெனில் NET Or SET தேர்வு எதற்கும் பிரயோஜனம் அற்றதாகிவிடும்.

    ReplyDelete
  13. NET,SET தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் வேலை தர முடியாது..அதனால் இன்னொரு போட்டி தேர்வு என்பது தான் சிறந்த வழி..
    இடைநிலை ஆசிரியர்,பட்டதாரி ஆசிரியர்,சிறப்பாசிரியர்,முதுநிலை ஆசிரியர்,பொறியியல் கல்லூரி பேராசிரியர்,சட்டக் கல்லூரி பேராசிரியர், கல்வியியல் கல்லூரி பேராசிரியர்,பல் தொழில் நுட்பக் கல்லூரி பேராசிரியர் என அனைத்து வகையான பணியிடங்களுக்கும் போட்டி தேர்வு நடத்தும்போது அதிக மாணவர்கள் படிக்கும் கலை கல்லூரி பேராசிரியர் பணியிடங்களுக்கு மட்டும் ஏன் போட்டி தேர்வு இல்லை?
    பொறியியல் கல்லூரி பேராசிரியர் பணியிடத்திற்கு கூட நெட்/செட் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மேலும் ஒரு போட்டி தேர்வு வைத்துதான் பணி நியமனம் வழங்கப்படுகிறது...NET/SET/Ph.D முடித்தவர்களுக்கு போட்டி தேர்வு எழுதி வெற்றி பெறுவதில் என்ன சிரமம் வந்து விட போகுது..போட்டி தேர்வு நடத்தாமல் தற்போதைய நடைமுறை தொடர்ந்தால் பணம் கொடுப்பவர்களுக்கு மட்டும் தான் பேராசிரியர் பணியிடம் என்ற நிலை நீடிக்கும்..

    ReplyDelete
    Replies
    1. அருமையான கருத்து... போட்டி தேர்வு மட்டுமே நல்ல பேராசிரியர்களை தேர்வு செய்ய சிறந்த வழி...

      Delete
  14. NET, SET போன்ற தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் எப்படி நல்ல பேராசிரியராக முடியும் சகோ. நல்ல திறமையும் தனது பாடத்தில் ஆழமான அறிவும் இருந்தால் மட்டும் தான் போட்டித் தேர்வில் வெற்றிபெற இயலும் சகோ. முனைவர் பட்டம் + NET/SET வெற்றி + பணி அனுபவம் உடையவர்களுக்கே இங்கு வேலைக்கு வழியை காணோம் இதில் இன்னமும் எத்தனை தேர்வு எழுதி தகுதியை நீருபிப்பது சகோ....

    ReplyDelete
    Replies
    1. சகோ இது தமிழ் நாடு ஆந்திரா இல்லை.நியாயமாக வேலை தந்துவிட.இங்கு பணம் மட்டுமே பிரதானமாக இருக்கிறது.

      Delete
    2. உண்மைதான் சகோ...

      Delete
  15. Experience 44%, interview 29%, for phd 27%,for Net/Set 15% for written test 0% (why?)

    ReplyDelete
  16. Exam must otherwise money .........

    ReplyDelete
  17. Engalukaga case file pannuna nanbarkaluku roomba thanks future la exam vandu kastapatavanga pass panni jop pona andha perumai ungaluku mattumdan thank u so much

    ReplyDelete
  18. NET/SET தேர்வு பெறாதவர்கள் மற்றும் பணி அனுபவம் அற்றவர்கள் மட்டுமே மேலும் ஒரு எழுத்துத்தேர்வு முறையை ஆதரிக்கின்றனர் சகோ...

    ReplyDelete
    Replies
    1. Sir engaluku experience@qualification irruku exam eludha talent irruku but money illa pls exam venum

      Delete
  19. UGC say only consider waitage mark, not decided state government So they are follow UGC norms only

    ReplyDelete
    Replies
    1. வரவேற்கிறோம்...

      Delete
    2. Sir, UGC now orders review of ph.d s completed for the last ten years as the quality and genuiness of the such ph.ds... Last month in its announcement, it says hereafter the appointment and promotions has been made on the quality of the pH.d thesis not the quantity of papers for assistant professor jobs. So, the UGC in the name of standardized the higher education, it degrades it. Further, if it gives exemption for ph.d holders for NET/SET qualifying exams then what is the need for conducting them. Gives more marks to ph.ds is another sad issue. Instead of that it may provide more marks to NET/SET and Ph.d holders (ie.both holders). NET/SET is conducted by National Testing Agency(previously by UGC) and state universities. Ph.ds are even awarded by many number of colleges. So UGC confused the higher education as well as the people. So court only does justice ....

      Delete
  20. First open competition, then the passed candidates may be considered asper the UGC norms.. because now the volume of Ph.d holders are more in numbers than NET/SET qualified persons

    ReplyDelete
  21. பணம் வாங்கத்தான் இப்படிபட்ட அறிவிப்பு......எவ்வளவு கூப்பாடு போட்டாலும் இறுதில் அரசின் கொள்கை முடிவு என நீதிமன்றத்தை குழப்பிவிடுவார்கள்.....பணம் கொடுத்து வேலைக்கு செல்ல நினைப்பவர்களை அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் பணம் வாங்கி கொண்டு ஏமாற்ற வேண்டும்.....அவர்களால் எங்கு சென்றும் முறையிட முடியாது....திருடர்களுக்கு தேள் கொட்டியது போல.....

    ReplyDelete
  22. தேர்வு நடத்தி தேர்ந்தெடுத்தால் மட்டுமே முறைகேடு இல்லாமல் இருக்கும்....

    ReplyDelete
  23. Are they consider postdoc experience? In that notification, they mentioned that the marks will be given for teaching experience. if weightage mark for selection, there are no marks allotted for publication, book chapter etc, which against UGC rules and regulations.

    ReplyDelete
    Replies
    1. ஏற்கனவே ஆசிரியர்கள் நியமத்தில் வெயிட்டேஜ் மூலம் ஓர் சமூக அநீதி நிகழ்ந்தது. அதனைப் போலவே இத்தகு பேராசிரியர் நியமனமும்.
      ஏன் போட்டி தேர்வு வைக்க தயங்குகின்றனர்.

      Delete
  24. Exam conduct panna trb polytechnic examlae corruption nadathathu.examae illatha pothu kandippa corruption nadakka niraya vaippu irukku.

    ReplyDelete
  25. யுஜிசி விதிகளில் தேர்வுக்கு இடமில்லை. பேரா. பணி என்பது நமது நாட்டில் வேறாகவே மதிப்படப்படுகிறது. ஆனால், தமிழ்நாட்டில் அது பணம் காய்க்கும் மரமாக பார்க்கப்படுகிறது. அரசுப்பள்ளி ஆசிரியர் சமூகத்திற்கோ...நம்மை விட., நம்மள மாதிரியே இருக்கிற ஒருத்தன் அதிகமா சம்பளம் வாங்குகிறானே என்ற துாக்கமின்மையால் வழக்கு வரை சென்று வழுக்கி விழுந்துள்ளனர் (நெட்- செட் அசோசியேசன்). 186 நாட்கள் மட்டுமே பள்ளிக்குச் செல்லும் ஆசிரியர்களால் தங்கள் குழந்தைகளை அரசுப்பள்ளியில் படிக்க வைக்க துணிவில்லை. ஆனால், பேரா. பணி மீது இரண்டு கண். பேரா. பணி என்பது தினந்தோறும் தங்களை கல்வியில் மேல் நோக்கி இழுத்துச்சொல்லும் அறிவுப்பயணம்! இன்றைய சூழலில், அதற்கு தகுதியானவர்கள் நிச்சயம் பள்ளி ஆசிரியர்கள்அல்ல. பேரா. ஆசிரியர் பணியிடங்களுக்காக ஊழல்... ஊழல்.. என்போர்...தமிழகத்தில் பல லட்சம் கோடி சுருட்டப்படுள்ளது பற்றி பேச மறுப்பது அறியாமையால் அல்ல...தங்களது அறிவின்மையால்!

    ReplyDelete
  26. ஒரு நடுநிலையாளராக ஒரு கேள்வி ,அலுவலக உதவியாளர் முதல் IAS வரை போட்டித் தேர்வு . பேராசிரியர் பணிக்கு மட்டும் ஏன் விதி விலக்கு?

    ReplyDelete
    Replies
    1. யுஜிசி விதிகளில் தேர்வுக்கு இடமில்லை. பேரா. பணி என்பது நமது நாட்டில் வேறாகவே மதிப்படப்படுகிறது. ஆனால், தமிழ்நாட்டில் அது பணம் காய்க்கும் மரமாக பார்க்கப்படுகிறது.

      Delete
  27. What is the status of this case filed in HC?...

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி