பாரதியார் பல்கலைக்கழக எம்.ஃபில்., பிஹெச்.டி. தேர்வு மையங்கள் அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 6, 2019

பாரதியார் பல்கலைக்கழக எம்.ஃபில்., பிஹெச்.டி. தேர்வு மையங்கள் அறிவிப்பு


கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் எம்.ஃபில்., பிஹெச்.டி. (எக்ஸ்டர்னல்) எழுத்துத் தேர்வுக்கான தேர்வு மையங் கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பாரதியார் பல்கலைக்கழகத்தின் எம்.ஃபில்., பிஹெச்.டி. பட்ட எழுத்துத்தேர்வுகள் நவம்பர் 25,27,29-ஆம் தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி பல்கலைக்கழகத் துறைக் ளின் அனைத்து பாடப்பிரிவு மாணவர்கள், எக்ஸ்டர்னல் பிஹெச்.டி. அனைத்து பாடப் பிரிவு மாணவர்கள், பெங்களூரு, மைசூரு ராணுவ ஆராய்ச்சி மைய மாணவர்கள் பாரதியார் பல்கலைக்கழக வளாகத் தில் அமையும் தேர்வு மையத்தில் தேர்வு எழுத வேண்டும்.

கோவை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள், பதிவு பெற்ற ஆராய்ச்சி நிலைய மாணவர்கள் டாக்டர் என்.ஜி.பி. கலை, அறிவியல் கல்லூரி சரியிலும், தாராபுரம், உடுமலை, பொள்ளாச்சி பகுதிகளைச் சேர்ந்த வர்கள் உடுமலை கமலம் கலை, அறிவியல் கல்லூரியிலும், திருப்பூ ரைச் சேர்ந்தவர்கள் திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியிலும், நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் உதகை அரசு கலைக் கல்லூரியிலும், ஈரோடு மாவட்ட மாணவர்கள் ஸ்ரீ வாசவி கல்லூரியிலும், தில்லி ஆளுகைக்கு உள்பட்ட ராணுவ ஆராய்ச்சி மைய மாணவர்கள் லக்னெள சாலையில் உள்ள டி.ஐ.ஏ.எஸ். வளாகத்தில் அமையும் மையத்திலும் தேர்வு எழுத வேண்டும்.

தேர்வுக்கு அனுமதிக்கப்பட்ட மாணவர்களின் தேர்வுக்கூடஅனும் திச் சீட்டுகள் மேற்கண்ட மையங்களில் நவம்பர் 20-ஆம் தேதி முதல் அரசு வேலைநாள்களில் வழங்கப்படும் என தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி (பொறுப்பு) ஆர்.விஜயராகவன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி