பொறியியல் கல்லூரிகளை நிர்வகிக்க புதிய பல்கலைக்கழகம் - kalviseithi

Oct 6, 2019

பொறியியல் கல்லூரிகளை நிர்வகிக்க புதிய பல்கலைக்கழகம்


பொறியியல் கல்லூரிகளை நிர்வகித்து வரும் அண்ணா பல்கலைக்கழகத்துக் குப் பதிலாக, புதிய தொழில் நுட்ப பல்கலைக்கழகம் உருவாக் கப்பட உள்ளதாக உயர் கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவிக் கின்றன.அண்ணா பல்கலைக்கழகத் துக்கு மத்திய அரசின் மேம் பட்ட கல்வி நிறுவன அந்தஸ்து கிடைக்க உள்ளதால், இந்த புதிய தொழில்நுட்ப பல்கலைக்கழகம் உருவாக்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுவருகின்றன.

இந்திய உயர் கல்வி நிறுவனங்களை உலகத் தரத்திலான கல்வி நிறுவனங்களாக மேம்படுத்தும் நோக்கத்தோடு, மேம்பட்ட கல்வி நிறுவன அந்தஸ்து வழங்கும் புதிய திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்தது.இந்தத் திட்டத்தின் கீழ் நாடு முழுவதிலுமிருந்து தில்லி ஐஐடி, மும்பை ஐஐடி, சென்னை ஐஐடி, சென்னை அண்ணா பல்கலைக் கழகம் உள்ளிட்ட 10 அரசு உயர் கல்வி நிறுவனங்களும், வேலூர் விஐடி உள்பட 10 தனியார் உயர் கல்வி நிறுவனங்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்த 20 கல்வி நிறுவனங்களுக் கும் புதிய படிப்புகளை அறிமு கம் செய்தல், பாடத் திட்டத்தை வகுத்தல், வெளிநாட்டுகல்வி நிறு வனங்களுடன் புரிந்துணர்வு ஒப் பந்தம் செய்தல், நிதி பெறுதல்மற் றும் கையாளுதல் என அனைத் திலும் முழுச் சுதந்திரம் அளிக் கப்படும். மத்திய அரசிடமோ அல்லது பல்கலைக்கழக மானி யக் குழுவிடமோ முன் அனுமதி பெறத் தேவையில்லை. அதுமட்டுமின்றி, இந்தத் திட்டத்தின் கீழ் தேர்வாகியிருக் கும் 10 அரசு உயர் கல்வி நிறுவ னங்களுக்கு ஆண்டுக்கு ரூ. 200 கோடி வீதம் 5 ஆண்டுகளுக்கு ரூ. 1000 கோடி மேம்பாட்டு நிதி வழங்கப்படும். இதில் அண்ணாபல்கலைக்கழகம் மாநில அரசு பல்கலைக்கழகம் என்பதால், இந்த நிதியில் குறிப்பிட்ட பங் களிப்பை மாநில அரசும் ஏற்க வேண்டும்.

அதுமட்டுமின்றி, இந்த மேம் பட்ட கல்வி நிறுவன அந்தஸ் தைப் பெறும் உயர் கல்வி நிறுவ னம் ஆராய்ச்சியிலும், புதிய கண் டுபிடிப்புகளிலும் முழுக் கவனம் செலுத்த வேண்டும் என்பதால் பொறியியல் கல்லூரிகளுக்கு இணைப்பு அந்தஸ்து வழங்கும் பல்கலைக்கழகமாக செயல்பட முடியாது. அந்த வகையில், அண்ணா பல் கலைக்கழகத்துக்கு இந்த அந் தஸ்து விரைவில் வழங்கப்பட கிடைப்பதன் எதிரொலி உள்ளதால், தமிழகத்தில் உள்ள 500 பொறியியல் கல்லூரிகளை யும் நிர்வகிக்க புதிய தொழில்நுட் பப் பல்கலைக்கழகத்தை உருவாக் குவதற்கான ஏற்பாடுகள் நடை பெற்று வருவதாக உயர் கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவிக் கின்ற ன. இதற்காக, சென்னை தரமணி யில் உள்ள மத்திய பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தைத் தேர்வு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) முன்னாள் துணைத் தலைவரும், மத்திய அர சின் மேம்பட்ட கல்வி நிறுவன அந்தஸ்துக்கான தேர்வுக் குழு வில் இடம்பெற்றவருமான பேரா சிரியர் தேவராஜ் கூறியது: - மத்திய அரசின் மேம்பட்ட கல்வி நிறுவன அந்தஸ்து அண்ணா பல்கலைக்கழகத்துக்கு அதிகாரப்பூர்வமாக கிடைத்தவு டன், அது இணைவு அளிக்கும் பல்கலைக்கழகமாக இயங்க முடியாது.அதாவது அண்ணா பல்கலைக் கழகத்தின் கீழ் பொறியியல் கல்லூரிகள் இயங்காது.

அண்ணா பல்கலைக்கழகம் ஆராய்ச்சிமேம்பாடு, புதிய கண்டுபிடிப்புகள், அறிவுசார் சொத்துரிமை பெறு ல் ஆகிய பணிகளில் மட்டுமே கவனம் செலுத்த முடியும். அதன் காரணமாக, தமிழகத்தில் உள்ள 500 பொறியியல் கல்லூரிகளை நிர்வகிக்க புதிய தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தை தமிழக அரசு உருவாக் கியே ஆகவேண்டும். இதற்கான ஏற்பாடுகளையும் தமிழக அரசு செய்து வருகிறது. அதேநேரம், மேம்பட்ட கல்வி நிறுவன அந்தஸ்து குறித்துவிரிவான விவரங்களை அளிக்குமாறு மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்துக்கு தமிழக அரசு சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ள து. இந்த முழுமையான விவரங்கள் கிடைத்த பின்னரே, அடுத்த கட்ட நடவடிக்கைகளை அரசு எடுக்கும் என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி