தனியார் பள்ளிகளில் இலவச சேர்க்கை : கல்விக் கட்டணம் அரசிதழில் வெளியீடு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 6, 2019

தனியார் பள்ளிகளில் இலவச சேர்க்கை : கல்விக் கட்டணம் அரசிதழில் வெளியீடு


இலவச கல்வித் திட்டத்தின்கீழ் தனியார் பள்ளி களில் சேர்க்கப்பட்ட குழந்தைகளுக்கு, கல்விக்கட்டணம் நிர்ண யம் செய்யப்பட்டு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

இதையடுத்து இந்த நிதி விரைவில் ஒதுக்கீடு செய்யப்பட்டு அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் விரைவில் வழங்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமைச் சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்களில் ஏழைக் குழந்தைகள் ஆண்டு தோறும் இலவசமாக சேர்க்கப்படுவர். இதில் எல்கேஜி அல்லது ஒன்றாம் வகுப்பில் சேரும் மாணவர்கள் 8-ஆம் வகுப்பு வரை கட்டணம் செலுத்தத் தேவையில்லை. இவர்களுக்கான கல்விக் கட்டணத்தை மத்திய, மாநில அரசுகள் இணைந்து செலுத்திவி டும். அதன்படி 2018-19-ஆம் கல்வியாண்டில் தனியார் பள்ளிக ளில் 64,385 பேர் சேர்ந்தனர். அந்தக் குழந்தைகளுக்கான கல்விக் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு அரசிதழில் வெளியிடப்பட் டுள்ளது.

 அதில், இலவச கல்வி உரிமைச் சட்டத்தின்படி 2018-19-ஆம்கல் வியாண்டில் தனியார் பள்ளிகளில் சேர்ந்துள்ள எல்கேஜி, யுகேஜி, |-ஆம் வகுப்பு குழந்தைகளுக்கு தலா ரூ.11,947 கட்டணமாக நிர்ண யிக்கப்பட்டுள்ளது. இதேபோல், இரண்டாம் வகுப்புக்கு ரூ.11,895, மூன்றாம் வகுப்புக்கு ரூ.12,039, நான்காம் வகுப்புக்கு ரூ.12,033, ஐந் தாம் வகுப்புக்கு ரூ.12,565, ஆறாம் வகுப்புக்கு ரூ.16,038, ஏழாம் வகுப்புக்கு ரூ.15,915 மற்றும் எட்டாம் வகுப்புக்கு ரூ.15,936 கட்ட ணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து நிதி ஒதுக் கப்பட்டு அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் விரைவில் கல்விக் கட்டண பாக்கித் தொகை வழங்கப்படும் என்று துறை அதிகாரி கள் தெரிவித்தனர். இதற்கிடையே 2013-18-ஆம் கல்வியாண்டுக ளில் தனியார் பள்ளிகளில் சேர்ந்த 4.83 லட்சம் குழந்தைகளுக்கான கல்விக்கட்டணம் ரூ.644 கோடி தனியார் பள்ளி நிர்வாகங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி