பிரதமர் மோடி- சீன அதிபர் ஜின்பிங் நாளை மாமல்லபுரத்தில் சந்திப்பதையொட்டி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு. - kalviseithi

Oct 10, 2019

பிரதமர் மோடி- சீன அதிபர் ஜின்பிங் நாளை மாமல்லபுரத்தில் சந்திப்பதையொட்டி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.


பிரதமர் மோடி- சீன அதிபர் ஜின்பிங் நாளை மாமல்லபுரத்தில் சந்திப்பதையொட்டி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

இதன் காரணமாக பள்ளி கல்லூரி பேருந்துகள் செல்வதில் குழப்பம் ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை மற்றும் நாளை மறுநாள் விடுமுறை அறிவிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இது தொடர்பாக இன்று மாலை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மாமல்லபுரம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் நாளை முதல் 3 நாட்களுக்கு விடுமுறை என்று காஞ்சிபுரம் ஆட்சியர் பொன்னையன் தெரிவித்துள்ளார். அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகளுக்கு வருகிற 11, 12,13ம் நாளை முதல் 3 நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

1 comment:

  1. Nalaiya vingyani program nadakkuma
    By Mahalakshmi teacher from Thirupoondi North Nagai

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி