தொழிலாளர்களின் குழந்தைகளுக்கான கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம் தமிழ்நாடு தொழிலாளர் நலவாரியம் அறிவிப்பு  - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 25, 2019

தொழிலாளர்களின் குழந்தைகளுக்கான கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம் தமிழ்நாடு தொழிலாளர் நலவாரியம் அறிவிப்பு 


தொழிலாளர் நலவாரியத்துக்கு நல நிதி செலுத்தும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகை, கல்வி ஊக்கத் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு தொழிலாளர் நலவாரியம் அறிவித்துள்ளது.தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழ்நாட்டில் உள்ள தொழிற் சாலைகள், கடைகள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள் மற்றும் தோட்ட நிறுவனங்கள் ஆகியவற் றில் பணிபுரிகின்ற, தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியத்துக்கு தொழிலாளர் நல நிதி செலுத் தும் தொழிலாளர்களின் பிள்ளை களுக்கு கல்விஉதவித்தொகை, கல்வி ஊக்கத் தொகை மற்றும் பாடநூல் உதவித் தொகை ஆகிய திட்டங்கள் அமல்படுத்தப் படுகின்றன. அடிப்படை ஊதியம், அகவிலைப்படி சேர்த்து ரூ.25 ஆயிரம் வரை ஊதியமாக பெறும் தொழிலாளர்கள் இத்திட்டங் களுக்காக விண்ணப்பிக்கலாம்.கல்வி உதவி தொகையாக ஒவ்வொரு கல்வி ஆண்டுக்கும் பொறியியல், மருத்துவம், சட்டம், ஆசிரியர் பயிற்சி, விவசாயம், உடற்பயிற்சி ஆகிய படிப்பு களுக்கு பட்டயப் படிப்பு மற்றும் பட்டமேற்படிப்பு வரை ரூ.5 ஆயிரம் முதல் ரூ.12 ஆயிரம் வரையிலும் மேல்நிலை கல்வி மற்றும் தொழிற் பயிற்சி கல்விக்கு ரூ.4 ஆயிர மும் வழங்கப்படுகிறது.

தமிழ்நாட் டில் ஒவ்வொரு கல்வி மாவட் டங்களிலும் அரசு பொதுத்தேர்வில் முதல் 10 இடங்கள் பெறும் தொழிலாளர்களின் பிள்ளை களுக்கு 10-ம் வகுப்புக்கு ரூ.2 ஆயிரமும் 12-ம் வகுப்புக்கு ரூ.3 ஆயிரமும் கல்வி ஊக்கத் தொகையாக வழங்கப்படுகிறது. புத்தகம் வாங்க உதவித் தொகை யாக மேல்நிலைக் கல்வி முதல் பட்ட மேற்படிப்பு வரை ரூ.1000 முதல் ரூ.3 ஆயிரம்வரை வழங்கப் படுகிறது.

இத்திட்டங்களுக்கான விண்ணப்பங்களை தாங்கள் பணி புரியும் நிறுவனத்தின் மூலம் வரும் டிசம்பர் 31-ம் தேதிக்குள் செயலா ளர், தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியம், அஞ்சல் பெட்டி எண்.78, தேனாம்பேட்டை சென்னை-6, என்ற முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி