ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு: இந்த மாத இறுதியில் தொடங்க திட்டம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 6, 2019

ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு: இந்த மாத இறுதியில் தொடங்க திட்டம்


அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்க ளுக்கு இந்த மாத இறுதி வாரத்தில் இடமாறுதல் கலந்தாய்வை நடத்த பள்ளி கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்க ளுக்கு ஆண்டுதோறும் மே மாதம் இடமாறுதல் கலந்தாய்வு நடத் தப்படும். காலியாக உள்ள இடங்களில், ஆசிரியர்களின் விருப்பத் துக்கு ஏற்ப, இடமாறுதல் வழங்கப்படும். இந்த ஆண்டு கலந்தாய்வு அறிவிப்பின் போது, தமிழக பள்ளி கல்வித்துறை, புதிய விதிகளை அறிவித்தது.

அதன்படி, அரசு ஊழியர்களை போல, ஆசிரியர்களும் குறைந்தபட்சம், மூன்று ஆண்டுகள் ஒரே இடத்தில் பணியாற்றி இருக்க வேண்டும். இதை எதிர்த்து, ஆசிரியர்கள் பலர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய் தனர். இந்த வழக்கு விசாரணைகளால், ஆசிரியர்களுக்கான இட மாறுதல் கலந்தாய்வு நான்கு மாதங்களுக்கு மேலாக நிறுத்தி வைக் கப்பட்டிருந்தது. இந்த நிலையில் கலந்தாய்வு நடத்துவதற்கு சென்னை உயர் நீதிமன்றத்தில், சட்டப்பூர்வ அனுமதியை பள்ளி கல்வித்துறை கேட்டுள்ளது. இந்த உத்தரவு கிடைத்ததும் இந்த மாத இறுதி வாரத்தில் கலந்தாய்வு நடவடிக்கைகளை பள்ளி கல்வித்துறை தொடங்கவுள்ளது.

 இதில் மூன்று ஆண்டுகள் ஒரே இடத்தில் பணியாற்றி இருக்க வேண்டும் என்ற விதியில் மாற்றம் செய்யப்ப டும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, நீதிமன்ற உத்தரவை கருத்தில் கொண்டு ஆசிரியர் களுக்கான கலந்தாய்வை உடனடியாக நடத்த வேண்டும் என பல் வேறுஆசிரியர் சங்கங்கள், கல்வியாளர்கள் வலியுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

5 comments:

  1. BC- BACK LOCK VACANCIES சம்பந்தமாக ஆலோசிக்க ஒரு குரூப் பார்ம் பண்ணலாம் நண்பர்களே

    ReplyDelete
  2. சென்ற முறை நடைபெற்ற தேர்வில் தகுதி மதிப்பெண் பெறாமல் தமிழ்,வரலாறு ,வேதியியல் பாடத்தில் BCமற்றும் BCM பிரிவில் 411 இடங்கள் நிரப்ப படாமல் பின்னடைவு காலிப்பணியிடங்கள் இருந்தன..MBC பிரிவினருக்கு 237 இடங்கள் பின்னடைவு காலிப்பணியிடங்கள் இருந்தன..

    தற்சமயம் வெளியாகி உள்ள அறிவிப்பில்..பின்னடைவு காலிப்பணியிடங்கள் MBC பிரிவினருக்கு உரிய 237 காலிப்பணியிட அறிவிப்பு வந்துள்ளது..

    ஆனால் BC,மற்றும் BCM பிரிவினருக்கு உரிய 411 இடங்கள் திட்டமிட்டு மறைக்கப்படுள்ளது...

    ReplyDelete
  3. புலி வருது புலி வருது கதைதான்.

    ReplyDelete
  4. தகவல் தரவும் :
    ஒரு பள்ளி Middle school to High school ஆக upgrade ஆகும்பொழுது,
    அங்கு பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களை உயர்நிலைப் பள்ளிக்கு ஈர்த்துக் கொள்ள பட்டால் (observe post) அது எவ்வகை
    மாறுதலில் வரும்?

    ReplyDelete
  5. தகவல் தரவும் :
    ஒரு பள்ளி Middle school to High school ஆக upgrade ஆகும்பொழுது,
    அங்கு பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களை உயர்நிலைப் பள்ளிக்கு ஈர்த்துக் கொள்ள பட்டால் (observe post) அது எவ்வகை
    மாறுதலில் வரும்?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி