எத்தனை பேர் சத்துணவு உண்கின்றனர்? தினமும் குறுஞ்செய்தி அனுப்ப சத்துணவு ஊழியர்களுக்கு உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 6, 2019

எத்தனை பேர் சத்துணவு உண்கின்றனர்? தினமும் குறுஞ்செய்தி அனுப்ப சத்துணவு ஊழியர்களுக்கு உத்தரவு


எத்தனை மாணவ, மாணவியர் சத்துணவு சாப்பிடுகின்றனர் என்ற விவரத்தை தினமும் குறுஞ்செய்தியாக வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்குஅனுப்ப சத்துணவு ஊழியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கு முறையாக சத்துணவு சென்று சேர்வதை உறுதி செய்யும் விதமாக, சத்துணவு சாப்பிடும் மாணவர்களின் எண்ணிக்கையை தினமும் குறுஞ்செய்தியாக (எஸ் எம் எஸ்) வட்டார வளர்ச்சி அலுவலருக்கு அனுப்ப வேண்டும் என்று ஊழியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து சமூகநலத்துறை அதிகாரிகள் கூறியது:

சத்துணவு பணியாளர்கள் மூலம் மாணவ, மாணவியருக்கு சத்தான, சுவையான உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றன. மாணவ, மாணவியருக்கு சத்துணவு முழுமையாக சென்று சேர்வதை உறுதி செய்ய பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

சத்துணவு சாப்பிடும் மாணவ, மாணவியரின் எண்ணிக்கையை வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் தினமும் குறுஞ்செய்தியாக அனுப்பி வருகின்றனர். தற்போது _சத்துணவு ஊழியர்களிடம் இந்த பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

எத்தனை மாணவ, மாணவியர் சத்துணவு சாப்பிடுகின்றனர் என்ற தகவலை தினமும் _சத்துணவு பணியாளர்களே நேரடியாக வட்டார வளர்ச்சி அலுவலருக்கு குறுஞ்செய்தியாக அனுப்ப வேண்டும்._ இவ்வாறு அவர்கள் கூறினர்.

2 comments:

  1. சென்ற முறை நடைபெற்ற தேர்வில் தகுதி மதிப்பெண் பெறாமல் தமிழ்,வரலாறு ,வேதியியல் பாடத்தில் BCமற்றும் BCM பிரிவில் 411 இடங்கள் நிரப்ப படாமல் பின்னடைவு காலிப்பணியிடங்கள் இருந்தன..MBC பிரிவினருக்கு 237 இடங்கள் பின்னடைவு காலிப்பணியிடங்கள் இருந்தன..

    தற்சமயம் வெளியாகி உள்ள அறிவிப்பில்..பின்னடைவு காலிப்பணியிடங்கள் MBC பிரிவினருக்கு உரிய 237 காலிப்பணியிட அறிவிப்பு வந்துள்ளது..

    ஆனால் BC,மற்றும் BCM பிரிவினருக்கு உரிய 411 இடங்கள் திட்டமிட்டு மறைக்கப்படுள்ளது...

    ReplyDelete
  2. Therinjukitu oru hairum pluck panna porathilla
    By Mahalakshmi teacher from Thirupoondi 👵

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி