தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரிகளில் மதரீதியில் மாணவர்களை அணி திரட்டுவதை தடுக்குமாறு கல்வித்துறை உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 23, 2019

தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரிகளில் மதரீதியில் மாணவர்களை அணி திரட்டுவதை தடுக்குமாறு கல்வித்துறை உத்தரவு


தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரிகளில் மதரீதியில் மாணவர்களை அணி திரட்டுவதை தடுக்குமாறு கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்துப்புராணங்கள், இதிகாசங்கள், இந்துத் தலைவர்கள் பற்றிய பிரச்சாரம் பள்ளிகளில் நடப்பதாக அரசுக்கு தகவல் வந்துள்ளது. பள்ளி, கல்லூரிகளில் 10 மாணவர்கள் கொண்ட குழுக்களையும் இந்து மாணவர் முன்னணி அமைத்து வருவதாகவும் புகார் எழுந்துள்ளது. இந்து மாணவர்களின் நடவடிக்கைகளைக் கண்காணிக்கவும் இந்து மாணவர் முன்னணி குழு அமைந்துள்ளதாக தகவல் பள்ளிக்கல்வித்துறைக்கு கிடைத்துள்ளது. இது தொடர்பாக நடவடிக்கைகள் மேற்கொள்ளபட வேண்டும் என்பதற்காக தமிழ்நாட்டில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு கல்வித்துறை துணைச்செயலாளர் எஸ்.வெங்கடேசன் அவரச கடிதம் அனுப்பி வைத்துள்ளார்.

அதில் இந்து மாணவர் முன்னணி, இந்து இளைஞர் முன்னணி என்ற பெயரில் பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களை திரட்டுவதற்காக பள்ளிக்கல்வித்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்து மாணவிகளை லவ் ஜிகாத் என்ற பெயரில் மற்ற மதத்தினர் கலப்பு திருமணம் செய்வதை தடுக்க இந்து அமைப்புகள் முயற்சி. பள்ளி, கல்லூரி மாணவர்களை மதரீதியில் அணி திரட்டுவது கல்வி நிலைய நிர்வாக விதிமுறைக்கு எதிரானது என கூறியுள்ளார். எனவே இது தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், மேலும் இது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

3 comments:

  1. நிர்வாகியின் அன்பான கவனத்திற்கு... கல்வி துறை அப்படி ஏதும் வெளியிட வில்லை என தகவல். நிர்வாகியின் கவனத்திற்கு சமுகத்தில் பதட்டம் தரும் செய்திகளை உடனுக்குடன் உடன் வெளியிட வேண்டாம். அரசு உத்திரவு வெளியிட்டால் மட்டும் பதிவிடவும். என் எனில் அரசிடம் இருந்து வேறு விதமான தடை எற்பட்டால் ஊடக செய்திகள் பதிவில் பாதிப்பை ஏற்படுத்தும்.

    ReplyDelete
    Replies
    1. பள்ளிகளில் மின்னஞ்சல் வந்துள்ளது.

      Delete
    2. பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மறுப்பு தெரிவித்து உள்ளார். பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மறுப்பு தெரிவித்து உள்ளார். இது ஜனநாயக நாட்டில் மக்கள் பிரதிநிதி தெரிவிக்கும் கருத்து மட்டுமே இறுதியானது. மேலும் இதுபோன்ற செய்திகளால் அரசுக்கு தேவையற்ற பிரச்சனை ஏற்படும் எனில். அவர்கள் எத்தகைய முடிவும் எடுத்துவிடுவார்கள் அதன் காரணமாக கூறியிருந்தேன்.

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி