இனி 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுத்தாளில் மாணவர்களின் பெயர் எழுதலாம் - பள்ளிக் கல்வித் துறை!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 23, 2019

இனி 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுத்தாளில் மாணவர்களின் பெயர் எழுதலாம் - பள்ளிக் கல்வித் துறை!!

வவரும் 2020ல் நடக்க இருக்கும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்கள் தங்களுடைய பெயரை தேர்வுத் தாளில் எழுத, வசதி ஏற்பட்டு இருக்கின்றது.
இதுவரை பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு விடைத்தாளில் தேர்வு எண் மட்டுமே எழுத வேண்டும் என்ற விதிமுறை இருந்தது. அதில் மாணவர்களின் பெயரோ அல்லது பாலினமோ குறிப்பிடப்படமாட்டாது.
மேலும் பெயர் குறிப்பிட்டு இருந்தால் விடைத்தாள்களை திருத்தும் ஆசிரியர்கள் தவறு செய்ய நேரிடும் என்பதன் காரணமாகவே, இந்த முறை பின்பற்றப் படாமல் இருந்துள்ளது.
தற்போது இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், "2020ல் நடைபெறவுள்ள 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்கள் தங்களது பெயரை எழுத ஆங்கிலத்தில் 34 எழுத்துகள் எழுதும் வகையிலும், தமிழில் 45 எழுத்துகள் வரை எழுதும் வகையிலும் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
கூடுதல் இடம் தேவைப்பட்டால், அவற்றையும் பதிவுசெய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
x

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி