5 மற்றும் 8ம் வகுப்பு பொதுத்தேர்விற்கு எதிரான வழக்கு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 21, 2019

5 மற்றும் 8ம் வகுப்பு பொதுத்தேர்விற்கு எதிரான வழக்கு


ஐந்து மற்றும் எட்டாவது வகுப்பிற்கு பொதுத் தேர்வு நடத்தும் அரசாணைக்கு எதிரான வழக்கில், 'தன்னார்வலர்களுடன் விவாதித்து, ஆலோசனைகளை தமிழக அரசிடம் மனுதாரர் அளித்து நிவாரணம் தேடலாம்,' என உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டது.

பட்டுக்கோட்டை பொன்னவராயன் கோட்டை ஆசிரியர் (ஓய்வு) ராஜேந்திரன் தாக்கல் செய்த பொதுநல மனு:

தமிழகத்தில் 2019-20 கல்வியாண்டு முதல் துவக்க கல்வியில் ஐந்து மற்றும் எட்டாவது வகுப்பிற்கு பொதுத் தேர்வு நடத்த பள்ளிக் கல்வித்துறை செப்.,13 ல் அரசாணை பிறப்பித்தது. இதனால் மாணவர்கள் இடைநிற்றல் அதிகரிக்கும். மாணவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படும். பதிலாக கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும். ஆசிரியர்கள் கற்பித்தல் திறனை மேம்படுத்த வேண்டும். முதல் வகுப்பு முதல் எட்டாவது வகுப்பு வரை போதிய ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். பள்ளிகளில் அடிப்படை வசதிகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அரசாணை பிறப்பிக்கும் முன் கல்வியாளர் குழு அமைத்து விவாதிக்கவில்லை.

பெற்றோர், ஆசிரியர்களிடம் கருத்துக் கோரவில்லை. அரசாணையை செயல்படுத்த இடைக்காலத் தடை விதித்து, ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு ராஜேந்திரன் மனு செய்தார்.நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், ஆர்.தாரணி அமர்வு உத்தரவு: இவ்விவகாரத்தில் ஆர்வமுள்ள தன்னார்வலர்களுடன் விவாதித்து, உரிய ஆவணங்களுடன் ஆலோசனைகளை தமிழக அரசிடம் மனுதாரர் அளித்து நிவாரணம் தேடலாம். நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை. வழக்கை பைசல் செய்கிறோம் என்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி