''ஐந்து, எட்டாம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடைபெறும். ஆனால், பெயில் இல்லை,'' - பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 1, 2019

''ஐந்து, எட்டாம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடைபெறும். ஆனால், பெயில் இல்லை,'' - பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன்


''ஐந்து, எட்டாம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடைபெறும். ஆனால், பெயில் இல்லை,'' என, பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.தமிழகத்தில், கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, நடப்புகல்வியாண்டு முதல், ஐந்து, எட்டாம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது.

இது தொடர்பாக, தொடக்கக்கல்வி இயக்குநர் சார்பில், தேர்வு வழிமுறை குறித்து, அனைத்து மாவட்ட முதன்மை அலுவலர்களுக்கு, நேற்று முன்தினம் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில், 'நடப்பு ஆண்டு முதல் தேர்வு நடக்கும்; ஆனால், மூன்று ஆண்டுகளுக்கு தேர்ச்சியை நிறுத்தி வைக்க வேண்டாம்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரூர் வெண்ணைமலையில், அமைச்சர் செங்கோட்டையன் நேற்று, நிருபர்களிடம் கூறியதாவது:மத்திய அரசின் கட்டாய கல்வி சட்டத்தின் படி, ஐந்து, எட்டாம் வகுப்புகளில் பொதுத் தேர்வு நடத்தப்படும். ஆனாலும், மூன்று ஆண்டுகளுக்கு தேர்ச்சி நிறுத்தி வைக்க, விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு பின், கல்வியாளர்கள் ஆலோசனை மற்றும் பிற மாநிலங்களின் நடவடிக்கைகளை பார்த்து, தேர்வு குறித்து ஒருமித்த முடிவு எட்டப்படும். இதனால், இடைநிற்றல் போன்ற எந்த பாதிப்பும் ஏற்படாது.இவ்வாறு, அவர் கூறினார்.

8 comments:

  1. What a logic?
    Then what is purpose of conducting board exam for children?
    Enna koduma Saravanan ethu.....

    ReplyDelete
  2. After 3 years nenga enga irukinganu parungada... Unga aatchiye irukathu...

    ReplyDelete
  3. இப்படி எல்லாம் எப்படி உங்களால் யோசிக்க முடிகிறது

    ReplyDelete
  4. இப்படி எல்லாம் எப்படி உங்களால் யோசிக்க முடிகிறது

    ReplyDelete
  5. ஏன் இப்படிலாம் யோசிச்சு எங்களை சாகடிக்கிங்க...... உங்களால் மட்டும் தான் முடியும்... பண்ணுங்க இன்னும் எவளோ முடியுமோ பண்ணுங்க...

    ReplyDelete
  6. தகுதி இல்லாத மாணவர்களை தேக்கம் அடைய செய்ய வேண்டும்
    *Fail கட்டாயம் வேண்டும்

    ReplyDelete
  7. ஏற்கனவே தகுதித் தேர்வுல தேர்ச்சி பெற்றால்தான் வேலைன்னு சொன்னீங்க. அப்படி தேர்ச்சி பெற்றவர்களுக்கு இன்னும் வேலை கொடுக்கல. இப்ப பால்வாடி பிள்ளைங்களுக்கு பொதுத் தேர்வு வச்சு என்னடா பண்ணப்போறீங்க. உங்க ஆட்சில தான் யாருக்கும் வேலை கொடுக்கறதே இல்ல. அப்படி கொடுத்தாலும் தொகுப்புதியம் என்று 7000 8000ம் னு கொடுத்து இளைஞர்களின் வாழ்க்கையையே பாழாக்கி நடுத்தெருவில குடும்பத்தோட நிறுத்திடுவீங்க. இதை எப்பவுமே கொள்கை முடிவா வச்சிருக்கீங்க. இப்ப அந்த பாலகர்களுக்கு வச்சு என்ன பண்ணப்போறீங்க?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி