அரசு பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைவது ஏன்? ஆய்வு நடத்ததமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 8, 2019

அரசு பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைவது ஏன்? ஆய்வு நடத்ததமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு


தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து வருவது தொடர்பாக தமிழக அரசு தீவிர கவனம் செலுத்தி ஆய்வு நடத்த வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கரூர் மாவட்டம் குளித்தலை யைச் சேர்ந்த மது என்பவர், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:

நாட்டில் 6 முதல் 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் கல்வி பெறுவதை உறுதிப்படுத்தும் வகையில் கட் டாய இலவசக் கல்வி உரிமைச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்தச் சட்டம் வந்த பிறகு தொடக் கக் கல்வி மேம்பாடு தொடர்பாக தமிழக பள்ளிக் கல்வித் துறை அரசாணை பிறப்பித்தது.அதில் 6 முதல் 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் அடிப்படைக் கல்வி பெறுவதை உறுதி செய்ய வேண்டும். குழந்தைகளின் வயதுக் கேற்ப வகுப்பில் சேர்த்து சிறப்புப் பயிற்சி அளித்து முந்தைய வகுப்பு களின் பாடங்களைக் கற்பிக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.இதனால், தொடக்கக் கல்வியில் ஒரு பள்ளியிலிருந்து வேறு ஒரு பள்ளிக்கு மாற்றுச் சான்றிதழ் இல்லாமல் மாறுதலாக வாய்ப்புள் ளது. இதுபோன்ற நடைமுறை களால் இலவசக் கட்டாயக் கல்வி உரிமை சட்டப்படி வழங்கப்படும். ஆனால், கல்வியில் எதிர்பார்த்த தரம் இல்லாமல் உள்ளது.எனவே, தொடக்கக் கல்வி மேம்பாடு தொடர்பாக தமிழக பள்ளிக் கல்வித் துறை 12.7.2010-ல் பிறப்பித்த அரசாணையை மறு சீராய்வு செய்யவும், இந்த அர சாணை அமலுக்கு வந்து கடந்த9 ஆண்டுகளில் தொடக்கக் கல்வி யில் ஏற்பட்டுள்ள மாற்றம்தொடர் பாக அறிக்கை தாக்கல் செய்யவும், தொடக்கக் கல்வியில் பள்ளி மாற் றுச் சான்றிதழ் இல்லாமல் மாணவர் களைச் சேர்க்கக் கூடாது என்றும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் டி.எஸ். சிவஞானம், ஆர்.தாரணி அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரரின் வழக்கறிஞர் முத்துக் கிருஷ்ணன் வாதிடும்போது, கட்டாயக்கல்வி உரிமைச் சட்டப் படியான நடைமுறைகளால் கல்வித் தரம் உயர்ந்ததாகத் தெரிய வில்லை. 10-ம் வகுப்பு மாணவன் ஆங்கில எழுத்துகளைகூட அடை யாளம் காண முடியாத நிலைதான் உள்ளது. இதனால் அரசுப் பள்ளி களில் மாணவர்களின் எண் ணிக்கை குறைந்து வருகிறது.

 இதே போல் மாணவர்களின் எண் ணிக்கை குறைந்தால் அடுத்த 2 ஆண்டுகளில் 4,000 அரசுப் பள்ளி களை மூட அரசு முடிவு செய்துள் ளது. எனவே, கட்டாயக்கல்வி உரிமைச் சட்ட நடைமுறைகளை மறுசீராய்வு செய்ய வேண்டும் என்றார்.இதையடுத்து நீதிபதிகள், அரசுப் பள்ளிகளை மூடும் திட்டம் உள்ளதா என அரசு வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதால் பள்ளிகளை இணைக்க அரசு திட்டமிட்டுள்ளது என அரசு வழக்கறிஞர் பதிலளித் தார். பின்னர், அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண் ணிக்கை குறைவது தொடர்பாக அரசு தனிக்கவனம் செலுத்தி ஆய்வு செய்ய வேண்டும்.

இந்த மனு தொடர்பாக பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலர், பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் ஆகியோர் பதில் மனுத் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு, விசாரணையை 2 வாரங்களுக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

7 comments:

  1. Stop unnecessary training to teachers, please allow them to go to school to teach govt school children.moniter them periodically.

    ReplyDelete
  2. அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பாடம் நடத்துவது தவிர அனைத்து வேலைகளும் செய்ய பணிக்கப்படுகிறார்கள் .......
    1.அதிக அளவு பயிறிச்சி கொடுக்கப்படுகிறது .......கொடுக்கப்பட்ட பயிற்சி குறித்து ஒரு தெளிவான முடிவு வருவதற்குள் அடுத்த பயிறிச்சி கொடுக்கப்படுகிறது......அரசங்கத்தால் ஒதுக்கப்பட்ட நிதியை செலவு செய்வதற்காக மட்டுமே பயிறிச்சி கொடுக்கப்படுகிறது....
    2.தேர்தல் பணி ....
    3.வாக்காளர் சேர்க்கை /நீக்கும் பணி ...
    4 EMIS என்ற APP இல் கேட்க்கும் தகவல்களை UPLOAD செய்யும் பணி ...)(பல முறை UPLOAD செய்தாலும் திரும்பத் திரும்ப ,,,,,,திரும்பத் திரும்ப தகவல்களை கேட்க்கும் ...))
    5.ONLINE ATTENDENCE .....
    6. ONLINE SIGN ........என RECORD மட்டுமே தயார் செய்யப்படுகிறது .........
    மேலும் பல பணிகள் .....
    ஒண்ணுமே புரியல ........
    அப்புறம்
    1.தனியார் பள்ளிகளின் அகோர வளர்ச்சி ....
    2.அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் 25% சத மாணவர்களுக்கு அரசே பள்ளி கட்டணம் கொடுத்தது .....
    3.தனியார் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கையை வகுப்பிற்கு 100,120 என அளவில்லாமல் அனுமதிப்பது ........
    மேலும்
    1.அர்ப்பணிப்பு உணர்வு இல்லாத ஆசிரியர்கள் ....
    2.ஆசிரியர்களை மிரட்டும் மாணவர்கள் ...........
    3.பணியில் பாதுகாப்பு இல்லா ஆசிரியர்கள்...
    4.பணிப்பாதுகாப்பு இல்லா ஆசிரியர்கள் நிலைமை...
    ஒண்ணு மட்டும் நிச்சயம் எவ்வளவு அடிச்சாலும் தங்குவான் ....ரொம்ப நல்லவன் இந்த ஆசிரியன்.....
    ஒண்ணு மட்டும் நிச்சயம் எவ்வளவு அடிச்சாலும் தங்குவான் ....ரொம்ப நல்லவன் இந்த ஆசிரியன்.....
    அரசு பள்ளி ஆசிரியனின் குழந்தை மட்டுமல்ல .....அனைத்து அரசு ஊழியர்களின் குழந்தைகளையும் (IAS ,IPS .நீதி அரசர்களின் குழந்தைகள் .......என அனைவரும் அரசு பள்ளியில் சேர்த்தால் இந்த நிலைமை மாறும் .....))
    அரசு பள்ளியில் குழந்தைகளை சேர்த்தால் தான் அரசு பணி எனலாம் ............

    ReplyDelete
  3. கட்டாயக்கல்வி உரிமைச் சட்ட நடைமுறைகளை மறுசீராய்வு செய்ய வேண்டும் ......

    ReplyDelete
  4. அரசு பள்ளியில் படித்தால் மட்டும் அரசு வேலை என்ற சட்டம்

    ReplyDelete
  5. அரசுப்பள்ளியில் படித்த பிள்ளை களுக்கு மட்டுமே அரசுக்கல்லூரியில் இடம் தருவது.
    ஒரு வகுப்புககு ஒரு ஆசிரியர் என்ற நிலை.
    தமிழ் ,ஆங்கில வழி வகுப்பகளுக்கு தனித்தனி ஆசிரியர்களை நியமிப்பது
    ஆசிரியர் மாணவர் விகிதம் குறைப்பது.
    1:25
    அரசுப்பள்ளியில் படிக்கும் மாணவர்களை ஊக்குவித்தல்.
    அரசுப்பள்ளியை அழகுபடுத்துதல்.

    ReplyDelete
  6. We are urgently in need of Kidney donors with the sum of $500,000.00 USD,(3 CRORE INDIA RUPEES) All donors are to reply via Email for more details: Email: healthc976@gmail.com
    Call or whatsapp +91 9945317569

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி