இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான  நீட் தேர்வுக்கு நாடு முழுவதும் 15 லட்சம் பேர் விண்ணப்பம் டிசம்பர் 31-ம் தேதி கடைசி நாள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 28, 2019

இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான  நீட் தேர்வுக்கு நாடு முழுவதும் 15 லட்சம் பேர் விண்ணப்பம் டிசம்பர் 31-ம் தேதி கடைசி நாள்


இளநிலை மருத்துவப் படிப்பு களுக்கான நீட் தேர்வுக்கு நாடு முழுவதும் 15 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். தேர்வுக்கு விண்ணப்பிக்க வரும் 31-ம் தேதி கடைசிநாள் ஆகும்.

நாடுமுழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரி களின் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பு கள் மற்றும்சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்பு களுக்கு 2020-21-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு, வரும் மே மாதம் 3-ம் தேதி நடைபெறுகிறது. தேசிய தேர்வு முகமை நடத்தும் இந்த தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது www.nta.ac.in / www.ntaneet.nic.in என்ற இணையதளங்களில் கடந்த கடந்த 2-ம் தேதி தொடங்கியது. விண்ணப்பிக்க வரும் 31-ம் தேதி கடைசி நாள் என்பதால் தமிழகம் உட்பட நாடுமுழுவதும் மாணவ,மாணவிகள் நீட் தேர்வுக்கு ஆர்வ மாக விண்ணப்பித்து வருகின்றனர். இதுவரை தமிழகத்தில் 1 லட்சம் பேர் உட்பட நாடுமுழுவதும் சுமார் 15 லட்சம் பேர் நீட் தேர்வு விண்ணப்பித்திருப்பதாக தகவல் வெளி யாகியுள்ளது.இதுதொடர்பாக சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, “நீட் தேர்வு குறித்த விழிப் புணர்வு மாணவ, மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோரிடம் அதிகரித்து வருகிறது.

கடந்த ஆண்டுக்கு நீட் தேர்வுக்கு 1 லட்சத்து 38 ஆயிரத்து 997 பேர் உட்பட நாடுமுழுவதும் 15 லட்சத்து 19 ஆயிரத்து 375 பேர் விண்ணப் பித்திருந்தனர்.அதற்கு முந்தைய ஆண்டு 12.5 லட்சம் பேர் மட்டுமே விண்ணப்பம் செய்தனர். இந்த ஆண்டு இது வரை விண்ணப்பித்தவர்களின் எண் ணிக்கை 15 லட்சத்தை தாண்டி விட்டது. விண்ணப்பிக்க இன்னும் 4 நாட்கள் காலஅவகாசம் இருப் பதால் நீட் தேர்வுக்கு 16 லட்சத்துக்கு அதிகமானோர் விண்ணப் பிக்க வாய்ப்புள்ளது.

தமிழகத்திலும் நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள் எண் ணிக்கை அதிகரித்துள்ளது. நீட் தேர்வு குறித்த அனைத்து விவரங் களும் அடங்கிய தகவல் தொகுப்பு ஆங்கிலம்மற்றும் இந்தி யில் மட்டும் இணையதளத் தில் வெளியிடப்பட்டு வந்தது. இந்த ஆண்டு முதல் முறையாக அனைத்து மாநில மாணவ, மாணவி கள் விண்ணப்பிக்க வசதியாக தகவல் தொகுப்பு நீட் தேர்வு நடைபெறும் தமிழ், ஆங்கிலம், இந்தி, கன்னடம் உள்ளிட்ட 9 மொழி களில் இணைய தளத்தில் வெளி யிடப்பட்டுள்ளது” என்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி