2018 - 19 மற்றும் 2019 - 2020 - ம் ஆண்டில் பயின்ற மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மடிக்கணினிகள் போக இருப்பிலுள்ள மடிக்கணினிகளின் எண்ணிக்கையை தெரிவிக்க தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு. - kalviseithi

Dec 28, 2019

2018 - 19 மற்றும் 2019 - 2020 - ம் ஆண்டில் பயின்ற மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மடிக்கணினிகள் போக இருப்பிலுள்ள மடிக்கணினிகளின் எண்ணிக்கையை தெரிவிக்க தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.

2017 - 2018 மற்றும் 2018 - 2019 - ம் ஆண்டுகளில் + 2 பயின்று தேர்ச்சிப் பெற்று தொடர்ந்து உயர்கல்வி பயிலும் மாணாக்கர்களுக்கு , அவர்கள் உயர்கல்வி பயிலும் கல்லூரி / நிறுவனங்களிலிருந்து உயர்கல்வி பயின்று வருவதற்கான சான்றினை ( Bonafide Certificate ) பெற்று பள்ளிகளில் வைத்துக்கொண்டு அதன் அடிப்படையில் மடிக்கணினிகள் வழங்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து , பார்வை 2 - ல் காண் பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகளில் மேற்கண்டவாறு மடிக்கணினிகள் வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்பட்டது . பார்வை 3 மற்றும் 4 - ல் குறிப்பிட்ட அரசுத் தலைமைச் செயலாளர் மற்றும் பள்ளிக் கல்வித்துறை செயலாளர் அவர்களின் தலைமையில் , தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட அறிவுரைகளின்படி 2017 - 2018 மற்றும் 2018 - 19 ஆம் கல்வியாண்டில் பயின்ற மாணவர்கள் உயர்கல்வி பயின்று வருவதற்கான சான்றினை ( Bonafide Certificate ) பெற்று தாங்கள் பயின்ற பள்ளிகளில் 11 . 01 . 2020 - ற்குள் ஒப்படைக்கப்பட வேண்டும் . இதற்குப் பிறகு பிறகு எக்காரணம் Bonafide Certificate ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது . எனவே , 11 . 01 . 2020 - க்குள் அனைத்து மாணவர்களும் Bonafide Certificate ஒப்படைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .

2 . 2018 - 19 - ம் கல்வியாண்டில் + 2 பயின்ற மாணவர்கள் தங்களுடைய Bonafide Certificate ஐ பள்ளித் தலைமையாசிரியர்களிடம் ஒப்படைக்கப்பட்டவுடன் பள்ளித் தலைமையாசிரியர்கள் உரிய மாணவனுக்கு மடிக்கணினி உடனே வழங்கப்படவேண்டும் .

3 . 2017 - 18 ஆம் கல்வியாண்டில் + 2 பயின்ற மாணவர்கள் தங்கள் கல்லூரியில் Bonafide Certificate பெற்று பள்ளிகளில் 11 . 01 . 2020 - க்குள் எத்தனை மாணவர்கள் ஒப்படைத்துள்ளனர் என்பதை பள்ளிவாரியாக கணக்கிடப்பட வேண்டும் .

4 , 2018 - 19 மற்றும் 2019 - 2020 - ம் ஆண்டில் பயின்ற மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மடிக்கணினிகள் போக பள்ளி வாரியாக இருப்பிலுள்ள மடிக்கணினிகளின் எண்ணிக்கையை சரிபார்த்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்க தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்க வேண்டும் .

5 . 2017 - 2018 - ம் ஆண்டில் பயின்ற மாணவர்களில் எத்தனை மாணவர்கள் Bonafide Certificate 11 . 01 . 2019 வரை பள்ளிகளில் ஒப்படைத்துள்ளனர் என்பதை பள்ளிவாரியாக கணக்கிடப்பட வேண்டும் .

 பள்ளிவாரியாக கணக்கிட்டு , இருப்பிலுள்ள மடிக்கணினிகளை கழித்துக் கொண்டு 2017 - 2018 - ம் ஆண்டிற்கு 11 . 01 . 2020 வரை ஒப்படைக்கப்பட்ட Bonafide Certificate அடிப்படையில் தேவைப்பட்டியலை இவ்வியக்ககத்திற்கு அனுப்ப வேண்டும் . 2017 - 2018 ஆம் கல்வியாண்டில் பயின்ற மாணவர்களுக்கு அந்தந்த பள்ளிகளில் இருப்பில் உள்ள மடிக்கணினிகள் எண்ணிக்கையினை ( 2018 - 19 மற்றும் 2019 - 20 ஆகிய வருடங்களில் மாணவர்களுக்கு வழங்கிய மடிக்கணினிகள் போக ) " Bonafide Certificate " ன் அடிப்படையில் கழித்து இன்னும் தேவைப்படின் தேவைப்பட்டியல் அல்லது கூடுதலாக இருப்பின் அதன் விவரத்தினையும் , பள்ளித் தலைமை ஆசிரியர்களிடமிருந்து பள்ளிவாரியாக பெற்று தொகுத்து இணைப்பில் கண்ட படிவத்தில் பூர்த்தி 13 . 01 . 2020க்குள் இவ்வலுவலக V2sec . tndse @ nic . in என்ற மின்ன ஞ்சல் முகவரிக்கு தவறாமல் அனுப்பிவிட்டு முதன்மைக் கல்வி அலுவலர் கையொப்பமிட்ட பிரதியினை விரைவு அஞ்சல் மூலம் அனுப்பி வைக்குமாறும் கூடுதல் தேவை அல்லது இருப்பு ஏதுமில்லை எனில் இன்மை அறிக்கையினை கண்டிப்பாக அனுப்பி வைக்கவும் , முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .

மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்ட அன்றே EMIS மென்பொருளில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும் . எனவே , இதன் மீது தனிக்கவனம் செலுத்தி 100 சதவீதம் EMIS பதிவு மேற்கொள்ள உரிய அறிவுரைகள் வழங்கவும் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள் .

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி