உள்ளாட்சி தேர்தல் பயிற்சி வகுப்பில் பங்கேற்காத 2170 ஆசிரியர்களுக்கு மெமோ! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 17, 2019

உள்ளாட்சி தேர்தல் பயிற்சி வகுப்பில் பங்கேற்காத 2170 ஆசிரியர்களுக்கு மெமோ!


தேர்தல் பயிற்சி வகுப்பு தொடர்பான அறிவிப்பு கடிதம் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி தலைமை அலுவலர் மற்றும் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு சார்வு செய்யப்பட்டு முதல் கட்ட தேர்தல் பயிற்சி 15.12.2019 அன்று அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் நடைபெற்றது .

இப்பயிற்சிக்கு மாவட்ட அளவில் 2170 பயிற்சியாளர்கள் வருகை புரியவில்லை எனவும் , பயிற்சிக்கு வருகை புரியாத அலுவலர்களின் விளக்கத்தினைப் பெற்று அனுப்பவும் அந்த அலுவலர்களை 18.12.2019 அன்று காலை 10.00 மணிக்கு தொடர்புடைய வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஆஜர்படுத்தவும் சேலம் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது .

எனவே ,  தேர்தல் பயிற்சிக்கு வருகை புரியாத வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள் மற்றும் வாக்குச்சாவடி அலுவலர்கள் தங்களுடைய விளக்கத்தினை சம்பந்தப்பட்ட வட்டாரக் கல்வி அலுவலகம் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலகங்களில் நாளை செவ்வாய்கிழமை ( 17.12 .2019 ) அன்று தெரிவித்து , புதன்கிழமை ( 18.12.2019 ) அன்று காலை 10 . 00 மணிக்கு இணைப்பில் கண்டுள்ள படிவத்தில் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தங்களுடைய வருகையை பதிவு செய்திட அறிவுறுத்தப்படுகிறது . மேலும் , வட்டாரக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்கள் இணைப்பில் கண்டுள்ள தேர்தல் பயிற்சிக்கு வருகை புரியாத ஆசிரியர்களிடம் நாளை செவ்வாய்கிழமை ( 17.12.2019 ) உரிய விளக்கத்தினை பெற்று அதனைத் தொகுத்து மாலைக்குள் முதன்மைக் கல்வி அலுவலகத்தில் சமர்ப்பித்திடவும் , புதன்கிழமை ( 18.12.2019 ) அன்று காலை 10.00 மணிக்கு தொடர்புடைய வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் அவர்களுடைய வருகையை பதிவு செய்திடவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளத் தெரிவிக்கப்படுகிறது .

              - முதன்மைக் கல்வி அலுவலர்                                    சேலம்

2 comments:

  1. தன்னுடைய 23 ஆண்டு கால பணியில் ஒரு தேர்தல் பணிக்குகூட செல்லாத ஆசிரியர்களும் நம்மிடையே இருக்கத்தான் செய்கின்றனர்.இவர்களுக்கெல்லாம் எந்த மெமோ ?கட்டாயப்படுத்தி அளிக்கப்படும் இந்த பணிக்கு விருப்ப விண்ணப்பம் வேறு பெற்றுக்கொள்கின்றனர்.

    ReplyDelete
  2. I am willing to do election work but i did not get why

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி