DSE - சிறந்த அறிவியல் ஆசிரியர் விருதிற்கு விண்ணப்பங்களை பரிந்துரை செய்திட 30 -12 -2019 வரை காலநீட்டிப்பு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 17, 2019

DSE - சிறந்த அறிவியல் ஆசிரியர் விருதிற்கு விண்ணப்பங்களை பரிந்துரை செய்திட 30 -12 -2019 வரை காலநீட்டிப்பு!


சிறந்த அறிவியில் ஆசிரியர் விருதிற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள 5 வகைப் பாடப்பிரிவுகளில் 7 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை வகுப்பு எடுத்திடும் தகுதி வாய்ந்த சாதனைகள் புரிந்துள்ள ஆசிரியர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் ஆவர் . மொத்தம் 10 ஆசிரியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் இவ்விருது வழங்கப்பட இருக்கிறது .

இவற்றுள் ஐந்து விருதுகள் தமிழ்வழியில் பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கும் , மேலும் ஐந்து விருதுகள் பொதுப்பிரிவில் ஆங்கிலம் மற்றும் தமிழ் வழியில் பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கும் பிரித்து வழங்கப்பட உள்ளன . இதற்கு விண்ணப்பித்திட மாதிரி விண்ணப்பப் படிவம் தொடர்பான விதிகள் www . sciencecitychennai.in என்ற அறிவியல் நகர இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் . தங்களுடைய ஆளுகைக்குட்பட்ட அனைத்து பள்ளிகளுக்கும் தகவலினைத் தெரிவித்து சிறந்த அறிவியல் ஆசிரியர்கள் விருது 2019 - 20 வழங்க ஏதுவாக அறிவியல் நகரத்தால் பரிந்துரைக்கப்பட்டுள்ள 5 வகைப் பாடப்பிரிவுகளில் , பாடப்பிரிவுக்கு ஒன்று வீதம் ஒரு மாவட்டத்திற்கு 5 பாடப்பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்ட ஆசிரியர்களின் நிரப்பப்பட்ட விண்ணப்பப்படிவங்கள் தலைமை ஆசிரியர் , முதன்மைக் கல்வி அலுவலர் வழியாக பள்ளிக் கல்வி இயக்ககத்திற்கு 15 . 09 . 2019 அன்று மாலை 5 . 30 மணிக்குள் இணைஇயக்குநர் ( தொழிற்கல்வி ) பெயரிட்ட முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலருக்கு தெரிவிக்கப்பட்டது .

பார்வை 4 - ல் காணும் அறிவியல் நகரம் , உயர்கல்வித்துறை துணைத்தலைவர் அவர்களின் கடிதத்தில் சிறந்த அறிவியல் ஆசிரியர் விருதிற்கு விண்ணப்பங்களை பரிந்துரை செய்திட 30 - 12 - 2019 வரை காலநீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

எனவே , உடனடியாக தங்கள் ஆளுகைக்குட்பட்ட பள்ளிகளுக்கு இத்தகவலினை தெரிவித்து பள்ளிக் கல்வி இயக்ககத்திற்கு 24 . 12 . 2019 அன்று மாலை 5 . 30 மணிக்குள் இணைஇயக்குநர் ( தொழிற்கல்வி ) பெயரிட்ட முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலருக்கும் தெரிவிக்கப்படுகிறது .

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி