
சென்னையில் இருக்கும் அண்ணா பல்கலைக்கழகம் இந்தியாவின் முதல் பொறியியல் பல்கலைக்கழகம் ஆகும். இந்தியாவில் தற்போது செயல்பட்டு வரும் பல்கலைக்கழகங்களில் மிக முக்கியமான கல்வி நிறுவனமாக அண்ணா பல்கலைக்கழகம் திகழ்கிறது
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து இங்கு மாணவர்கள் படிக்கிறார்கள். அண்ணா பல்கலைக்கழகத்தில் சேர்வது கடினம் என்பதால் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்கள் மட்டுமே இங்கு சீட் பெற முடிகிறது. வருடம் தோறும் பல லட்சம் பொறியாளர்களை அண்ணா பல்கலைக்கழகம் உருவாக்குகிறது.
தமிழகத்தில் உள்ள பெரும்பாலான பொறியியல் கல்லூரிகள் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு கீழ்தான் இயங்கி வருகிறது. இந்த நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.அதற்கான சாத்திய கூறுகளை ஆய்வு செய்ய 5 அமைச்சர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது. இன்று காலையில் இருந்து இதற்கான பணிகள் தொடங்கும். தற்போது இருக்கும் அண்ணா பல்கலைக்கழகம் மத்திய அரசின் கீழ் கொண்டு செல்லப்படும். அதன்பின் அதற்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கப்பட்டு அது தனியாக செயல்படும்.
தனியாக இன்னொரு பல்கலைக்கழகம் தொடங்கப்படும். அதற்கு கீழ் மற்ற தமிழக பொறியியல் கல்லூரிகள் கொண்டு வரப்படும். தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் வழங்குவது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள இன்னொரு பல்கலைக்கழகம் கொண்டு வரப்படும்.
இந்த திட்டம் காரணமாக அண்ணா பல்கலைக்கழகத்திற்கு நுழைவு தேர்வு கொண்டு வரப்பட வாய்ப்புள்ளது . அதேபோல் தமிழக அரசின் 69% இடஒதுக்கீடும் முற்றாக நீக்கப்படும். இதனால் இந்த முடிவிற்கு அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி